Fathers Day 2025: வாழும் கடவுள் அப்பா.. தந்தைகளை போற்றும் தரமான தமிழ் படங்கள் இதுதான்

6 months ago 5
ARTICLE AD

Fathers Day 2025: ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் முதல் கதாநாயகன் தந்தை. அப்பேற்பட்ட தந்தையை போற்றும் விதமாக தந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தந்தையர் தினத்தில் தந்தையின் அன்பை போற்றும் விதமாக வெளியான எவர்கிரீன் தமிழ் படங்களை காணலாம்.

1.தவமாய் தவமிருந்து:

சேரன் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் தவமாய் தவமிருந்து. ஒரு நடுத்தர தந்தை மகன்களை வளர்க்க எப்படி சிரமப்படுகிறார் என்பதை மிக யதார்த்தமாக காட்டிய திரைப்படம். இந்த படத்தில் ராஜ்கிரண் தந்தை கதாபாத்திரத்தில் மிளிர்ந்திருப்பார். விஜய் டிவி புகழ் செந்தில், சேரன் அண்ணன், தம்பிகளாக நடித்திருப்பார்கள். ராஜ்கிரண், சேரன், சரண்யா, பத்மப்ரியா என அனைவருமே அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இப்போது பார்த்தாலும் கண்ணீர் வரவழைக்கும் திரைப்படமாக இந்த படம் உள்ளது.

2. தெய்வத்திருமகள்:

நடிகர் விக்ரம் நடிப்பின் உச்சமாக கொண்டாடப்படும் படங்களில் ஒன்று தெய்வத் திருமகள். மனநலம் பாதிக்கப்பட்ட தந்தைக்கும், அவரது மகளுக்கும் நடக்கும் அழகான பாசப்போராட்டமே இந்த தெய்வத்திருமகள். விக்ரம், அனுஷ்கா, அமலாபால், நாசர், சாரா அர்ஜுன், சந்தானம் ஆகியோர் நடித்த இந்த படம் தந்தையின் அன்பை போற்றும் பொக்கிஷம் ஆகும். ஏ.எல்.விஜய் இயக்கிய இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கும்.

3. அப்பா:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரகனி நடித்து இயக்கிய படம் அப்பா. 2016ம் ஆண்டு வெளியான இந்த படம் ஒரு தந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும், தனது ஆசையை மகன் மீது திணிக்கக்கூடாது என்பதற்கும் மிகச்சிறந்த உதாரணமாக இருந்தது. சமுத்திரக்கனியும், தம்பி ராமையாவும் நடிப்பை போட்டி போட்டு வெளிப்படுத்தியிருந்தனர். பதின்ம பருவ குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? என்று மிக அருமையாக பதிவு செய்த படம்.

4. தங்க மீன்கள்:

2013ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தங்க மீன்கள். ஒரு தந்தைக்கும் - மகளுக்கும் நடக்கும் அழகான பாசப்போராட்டத்தில் கல்வி, கணவன் மனைவி உறவு, தந்தை மகன் உறவு என பலவற்றை பேசியிருக்கும் இந்த படம். மிக அழகான காவியமாக இன்றும் இந்த படம் உள்ளது. குறிப்பாக, மகள்களைப் பெற்ற தந்தைகளுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தைச் சேர்ந்தது அல்ல என்ற வசனம் காலம் முழுவதும் அழியாத வசனம் ஆகும்.

5. வாரணம் ஆயிரம்:

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாக நடிகர் சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை தந்த படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தில் இடம்பெற்ற காதல் காட்சி பலரையும் கவர்ந்தாலும் இந்த படம் ஒரு மகன் தந்தையை போற்றும் படமாகவே எடுக்கப்பட்டிருக்கும். சூர்யா தந்தையாகவும், மகனாகவும் நடித்து அசத்தியிருப்பார்.

6. அசுரன்:

தனுஷ் திரை வாழ்வில் மிகப்பெரிய படமாக இருப்பது அசுரன். ஒரு சாமானிய குடும்பத் தலைவன் தனது குடும்பத்தை காப்பாற்ற எந்தளவு செல்கிறான் என்பதே படம் ஆகும். தனுஷ் தனது குடும்பத்திற்காக இறங்கிச் செல்வதும், பின்னர் தனது குடும்பத்தை காப்பாற்ற வன்முறையில் இறங்குவதம் என படம் ஒரு சாமானிய தந்தை வன்முறையில் இறங்குவதே படம் ஆகும்.

7. அபியும் நானும்:

தந்தை மகள் பாசத்தை பறைசாற்றும் திரைப்படம் அபியும் நானும். இதில் தந்தையாக பிரகாஷ்ராஜும், மகளாக த்ரிஷாவும் நடித்திருப்பார்கள். ராதாமோகன் இயக்கிய இந்த படம் ஒரு பெண் குழந்தையை தந்தை எப்படி பாசமாக வளர்க்கிறார்? என்பதே கதை ஆகும். இதில் தந்தையாக பிரகாஷ்ராஜ் தனது உணர்வுகளை மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். குடும்பத்துடன் கண்டுகளிக்க மிகவும் அருமையான திரைப்படம் அபியும் நானும்.

8. மகாநதி:

கமல்ஹாசனின் காவியங்களில் தவிர்க்க முடியாத ஒரு திரைப்படம் மகாநதி. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் குடும்பம் எதிரிகளால் சிதைக்கப்படுவதும், பின்னர் தனது மகளைத் தேடி அலைவதும் என அருமையான படமாக அமைந்திருக்கும். குறிப்பாக, பாலியல் தொழிலாளியாக சிக்கியிருந்த தனது மகளை கமல்ஹாசன் தேடிச் செல்லும் காட்சி பார்ப்பவர்கள் மனதை உலுக்கும்.

Read Entire Article