Fastest Electric Cars: உலகின் அதிவேகமான மின்சார கார்களின், டாப் 5 லிஸ்ட் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

டெஸ்லா மாடல் எஸ் பிளேட்

டெஸ்லா மாடல் S Plaid என்பது உலகின் மிகவும் பிரபலமான மின்சார வாகனங்களில் ஒன்றாகும். இந்த கார் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமானது என்றும் அறியப்படுகிறது. இது பூஜ்ஜியத்திலிருந்து நூறு கிலோ மீட்டர் எனும் வேகத்தை 2.1 வினாடிகளில் எட்டிவிடும். வேகத்தை அதிகரிக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 630 கிமீ தூரம் பயணிக்கலாம். இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால், அதன் விலை ரூ.1.5 கோடி இருக்கும் என கருதப்படுகிறது.

லூசிட் ஏர் சபையர்

லூசிட் ஏர் சபையர் பின்புறத்தில் மிகவும் சக்திவாய்ந்த மின்சார மோட்டார்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த கார், வெறும் 1.9 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 330 கிமீ வேகத்தில் பயண்க்கும் என கூறப்படுகிறது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 687 கிமீ தூரம் பயணிக்கலாம். அமெரிக்க சந்தையில் இதன் விலை, 2 கோடி ரூபாய் வரை உள்ளது.

லோட்டஸ் எவிஜா:

லோட்டஸ் எவிஜா என்பது ஏரோடைனமிகலாக சிறந்த கார்களில் ஒன்றாகும். கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் அடையும் போது, நன்கு வடிவமைக்கப்பட்ட இந்த வடிவமைப்பு அதன் பங்கை வெளிப்படுத்துகிறது. இது மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 402 கிமீ தூரம் வரை பயணிக்கும். லிமிஎட் எடிஷனாக தயாரிக்கப்பட்ட இந்த காரின் விலை சுமார் 19 கோடி ரூபாயாகும்.

பினின்ஃபரினா பாட்டிஸ்டா

Pininfarina Battista மற்றொரு மாடல் ஆகும், இது அதன் திறன்களால் மின்சார கார் உலகில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளது. 1877 பிஎச்பி கொண்ட இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 1.8 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும். இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 476 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.19.45 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிமாக் நெவேரா

ரிமாக் நெவெரா வேக சாதனைகளை முறியடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. கார் வியக்கத்தக்க வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இது 0-100 கிமீ வேகத்தை வெறும் 1.74 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாகமணிக்கு 415 கிமீ வேகத்தில் பயணிக்கும். இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், 490 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். இதன் விலை இந்திய சந்தையில் 21 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்படுள்ளது.