வேட்டையன் ஆடியோ லாஞ்சு

ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார். வேட்டையன் திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் நடிகர் ஃபகத் ஃபாசில் பற்றி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது

ஃபகத் ஃபாசில் பற்றி ரஜினிகாந்த்

இந்த படத்தில் ஒரு கேரக்டர் ரொம்ப பிரமாதமானது. இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை நான் எந்த படத்திலும் பார்த்தது இல்லை. இந்த கேரக்டருக்கு ஃபகத் ஃபாசில் தான் வேண்டும் என்று இயக்குநர் உறுதியாக இருந்தார். ஃபகத் ஃபாசிலுக்கு கேரக்டர் பிடித்திருப்பதாகவும் சம்பளமே இல்லாமல் அவர் இந்த படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக ஃபகத் ஃபாசில் சொன்னதாக இயக்குநர் சொன்னார். ஆனால் ஃபகத் ஃபாசில் இரண்டு மாதம் டைம் கேட்டார். எனக்காக சன் பிக்ச்சர்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் காத்துக்கொண்டு இருந்தார்கள். அப்போ லோகேஷ்கிட்ட 'கொஞ்சம் நம்ம ஷூட் தள்ளி வச்சுக்கலாம்'னு சொன்னேன். உடனே அவர் 'சார்... ப்ளீஸ்'னு சொன்னார். அப்போதான் தெரிஞ்சது.அவர் இன்னும் கதையை சரியா பண்ணலன்னு.” என்று ரஜினி பேசினார்