EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம்

1 year ago 6
ARTICLE AD

இவிஎம் எந்த OTPயாலும் திறக்கப்படவில்லை, எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஹேக்கிங் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சிவசேனாவின் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.பி ரவீந்தர வைகர் வெற்றி பெற்றார். ரவீந்திர வைகர் வடமேற்கு தொகுதியில் மீண்டும் எண்ணப்பட்ட பின்னர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனிடையே ரவீந்தர வைகரின் உறவினர் மங்கேஸ் பண்டில்கர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் எடுத்து சென்றதாக புகார் எழுந்து சர்ச்சையானது.

தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்தில் பல வேட்பாளர்கள் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில் சிவசேனா ஷிண்டே பிரிவு எம்பி ரவீந்திர வைகரின் மைத்துனர் மீது மும்பை போலீசார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கோரேகான் தேர்தல் மையத்திற்குள் தடையை மீறி மொபைல் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் போலீசார் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

இதனுடன், மங்கேஷ் பாண்டில்கரிடம் மொபைல் போனை கொடுத்த தேர்தல் கமிஷன் ஊழியர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே எதிர்க்கட்சிகள் செல்போனை வைத்து OTP மூலம் இவிஎம் மிஷின் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இந்நிலையில், , ​​எதிர்க்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு, தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

இது குறித்து தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி கூறியதாவது: ”இன்று வந்த செய்தி குறித்து சிலர் ட்வீட் செய்தனர். EVM ஐ திறக்க OTP தேவையில்லை. EVM கருவி எதனுடனும் இணைக்கப்படவில்லை. முற்றிலும் தவறான செய்தியை நாளிதழ் வெளியிட்டுள்ளது. EVM என்பது ஒரு தனி அமைப்பு. அந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்று அந்தத் நாளிதழுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். 499 ஐபிசியின் கீழ் அவதூறு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கௌரவ் வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட மொபைல் அவரது சொந்த மொபைல். போலீஸ் விசாரணைக்குப் பிறகு, மேலும் விசாரணை நடத்துவதா இல்லையா என்பது குறித்து  முடிவு செய்யப்படும். நீதிமன்ற உத்தரவின்றி எங்களால் சிசிடிவி காட்சிகளை யாருக்கும் கொடுக்க முடியாது, காவல்துறையிடம் கூட கொடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

Read Entire Article