ஈரோடு மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் நாளை ( பிப்ரவ்ரி 06, 2026, வெள்ளிக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்சாரம் தடைப்படும் பகுதிகள்:

வில்லரசம்பட்டி

பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம், மல்லி என்.

பெரியாண்டிபாளையம்

ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லியம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ்.

மின்வெட்டு நேரத்தில் தேவையான முன்னெச்சரிக்கை:

மின்தடை நேரத்தில் திடீர் விபத்துகளை தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.