ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பல்வேறு தரப்பட்ட கட்சிகள் போட்டியிடாத நிலையில் அந்த கட்சிகளின் வாக்குகளை தனக்கு வரும் நம்பிக்கொண்டு இருந்த நாதக டெபாசிட் கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானததைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற முன்னணி கட்சிகளுடன் அறிமுக கட்சியான விஜய்யின் த.வெ.க.வும் இந்த தேர்தலை புறக்கணித்தது. தி.மு.க. - நாம் தமிழர் கட்சிகள் என இருமுனை போட்டு நிலவின. இந்த தேர்தலில் மொத்தம் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியது. மொத்தம் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகளில் இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

தேர்தல் முடிவுகள்:

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்து வந்தார். இதனால் இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தோல்வி உறுதியாகி விட்டது.

இதையும் படிங்க: Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?

நாதகவுக்கு சாதக பாதகமா?

இந்த தேர்தலில் முக்கிய கட்சிகள் யாரும் களமிறங்காத நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் களத்தில் இறங்கியது. மற்ற கட்சிகளின் வாக்குகள் நாம் தமிழர் பக்கம் சாயும் என சீமான் கணக்கு போட்ட நிலையில் அது ஓரளவுக்கு வெற்றியையும் கொடுத்துள்ளது. கடந்த முறை நடந்த இடைத்தேர்தல் 10827 வாக்குகள் மட்டுமே பெற்றனர், இது மொத்த வாக்குகளில் 6.35 சதவீதிம் ஆகும். ஆனால் வாக்கு சதவீதம் வாங்கினாலும் அந்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.

தற்போது நடந்த இந்த தேர்தலில் நாதக 13 ஆயிரம் வாக்குகளை கடந்தது, இது சென்ற முறை வாங்கியதை விட அதிகம் என்றாலும் டெபாசிட் வாங்குவதற்கு 26 ஆயிரம் வாக்குகள் தேவைப்படுகிறது. அதை தாண்டுவது என்பது தற்போது கடினமாக பார்க்கப்படுகிறது.

ஒரு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த தனது பேச்சை தவிர்த்திருந்தால் இந்த தேர்தலில் அவருக்கு மேலும் சில வாக்குகள் கிடைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆனால் திமுக என்னும் இமய மலையை எதிர்த்த நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தல் சீமானின் பெரியார் எதிர்ப்பு பேச்சு மற்றும் கட்சி நிர்வாகிகள் விலகல் காரணமாக ஒரு பின்னடைவுதான்.