தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டுக்கு வேண்டிய உரிமைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த முறை வக்ஃப் சட்டத்திருத்தங்கள் தொடர்பாகவும் அவரிடம் வலியுறுத்த வேண்டுகோள் வைக்கிறேன்." என்று முதல்வர் தெரிவித்தார்.