<p style="text-align: justify;">தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், அதிமுகவில் இருந்து சென்ற அமைச்சர் ரகுபதி நன்றி மறந்து செயல்பட்டு வருவதாகவும் சேலம் மாவட்டம் ஒமலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;"><strong>வீடியோவை போட்டுக் காட்டி சட்டம் ஒழுங்கு பற்றி பேச்சு</strong></p>
<p style="text-align: justify;">ஆவடி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற பெண்ணை தனியாக இருக்க அழைத்த காவலர் குறித்த வீடியோவை போட்டுக் காட்டி இப்படிதான் போலீசார் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் முதல்வருக்கு இது எதுவுமே தெரியாததால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த ஆட்சியில் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்றும் அவர் திமுக அரசை சாடியுள்ளார்.</p>