Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி

2 months ago 13
ARTICLE AD

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. பல ஓட்டல்களில் சிலிண்டர் கிடைக்காத காரணத்தால் நிலை உருவானது. பல ஓட்டல்கள் மூடப்பட்டது.  வீட்டு உபயோக சிலிண்டருக்கான காத்திருப்பு காலமும் 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டது.

அடுத்ததாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும் என பரவிய தகவலால் தமிழகம் முழுவதும் பல பெட்ரோல் பங்குகளில் மக்களின் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தடை விதிக்கப்பட்டாலும் அதனை கண்டுகொள்ளால் வாட்டர் கேன்களில் பெட்ரோலை வாகன ஓட்டிகள் வாங்கி சென்றனர். இந்த நிலையில் தான் தமிழக அரசு சார்பாக சிலிண்டர் இருப்பு, பெட்ரோல் டீசல் இருப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுத முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷணன் கூறுகையில், பொதுமக்கள் அச்சத்தில் அதிகளவு பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கியதால் 100% விற்பனை அதிகரித்தாக தெரிவித்தார்.

மேலும் ஓட்டல்களில் மின்சார அடுப்புகள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மின் அடுப்புகள் வாங்க 25% மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஓட்டல்களில் யூனிட்டிற்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

Read Entire Article