இன்று மாலை நடத்தை விதிகள் அமல்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இன்று மாலை 4 மணியளவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழக அரசின் செயல்பாடுகள் வந்து விடும். இன்று மாலை முதல் தமிழக அரசு காபந்து அரசாகவே செயல்படும். இந்த சூழ்நிலையில் உரிய ஆவணம் இல்லாமல் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். இது போன்ற பல நடைமுறைகள் இன்று முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

நடத்தை விதிகள் என்ன.?

மாநில அரசு தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் செயல்படும்.

புதிய நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகள் அறிவிக்க தடை.

அரசு செலவில் அரசியல் விளம்பரங்கள் வெளியிட தடை

முதலமைச்சர் அமைச்சர்கள் புகைப்படங்கள் உள்ள விளம்பரங்கள் அகற்றப்படும்

அரசு வாகனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த தடை.

பொதுமக்கள் அதிக பணம் எடுத்துச் சென்றால் ஆவணம் காட்ட வேண்டும் பொதுவாக ₹50,000 க்கும் மேல் பணம் எடுத்துச் செல்லும்போது அதன் மூலத்தை நிரூபிக்கும் ஆவணம் அவசியம்.

சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ₹40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதி.

அரசு கட்டிடங்களில் உள்ள MLA அலுவலகங்கள் அரசியல் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படாமல் கண்காணிக்கப்படும்.சில இடங்களில் தற்காலிகமாக மூடப்படவும் வாய்ப்பு.

அரசியல் கட்சிகள் மதம், சாதி, மொழி அடிப்படையில் வாக்கு கேட்க தடை.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் வழங்குவது தேர்தல் குற்றம்

பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு காவல்துறை அனுமதி அவசியம்.

வாக்குச்சாவடி அருகே 100 மீட்டர் வரை தேர்தல் பிரசாரம் தடை தேர்தல் காலத்தில் வாகன சோதனைகள் தீவிரம்.

வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் செயல்படும்.செலவு வரம்பை மீறினால் தேர்தல் ஆணையம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.