Egg Benefits: மரணத்தைக் கூட தள்ளிப்போடும் முட்டை..! இதய ஆரோக்கியத்தின் கார்டியன், இவ்வளவு நன்மைகளா?

10 months ago 7
ARTICLE AD

Egg Benefits: உணவில் அடிக்கடி முட்டையை சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

வாழ்நாளை அதிகரிக்கும் முட்டை:

முட்டைகள் புரதத்தின் நல்ல ஆதாரமாகும். அதோடு,  வைட்டமின் பி, ஃபோலேட், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் (ஏ, டி, ஈ மற்றும் கே), கோலின் மற்றும் இரும்புச்சத்து போன்றவை முட்டையில் நிறைந்து காணப்படுகின்றன. அதேநேரம், அதிகமாக முட்டை சாப்பிடுவது உங்கள் கொழுப்பை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சிலர் கூற கேள்விப்பட்டிருக்கலாம். இந்த கட்டுக்கதைக்குப் பின்னால் உள்ள ஆராய்ச்சியை, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பலமுறை ஆய்வு செய்துள்ளனர். அதன் முடிவில் மேற்கூறப்பட்ட கூற்றுக்கள் மறுக்கப்பட்டுள்ளன. முட்டை சாப்பிடுவது வயதானவர்களின் இதயத்திற்கு நன்மை பயக்கும், மேலும் சிறு வயதிலேயே இறக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதைப் பற்றி விரிவாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மரணத்தை தள்ளிப்போடும் முட்டை

வயதானவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் (ASPREE ஆய்வு),  ஒரு தொடர்ச்சியான ஆய்வின் தரவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். 8,000 க்கும் மேற்பட்ட மக்களைப் பற்றிய அவர்களின் பகுப்பாய்வில், மக்கள் பொதுவாக உண்ணும் உணவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் மருத்துவ பதிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளைப் பயன்படுத்தி ஆறு ஆண்டுகளில் எத்தனை பங்கேற்பாளர்கள் இறந்தனர், என்ன காரணத்தால் இறந்தனர் என்பதைக் கண்டறிந்தனர். ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மக்களின் உணவு முறை பற்றிய தகவல்களை உணவு வினாத்தாள் மூலம் சேகரித்தனர். அதில் கடந்த ஆண்டில் பங்கேற்பாளர்கள் எவ்வளவு, முட்டைகளை சாப்பிட்டார்கள் என்பது பற்றிய கேள்வியும் இடம்பெற்று இருந்தது

ஒருபோதும் முட்ட சாப்பிடவில்லை/எப்போதாவது - (எப்போதும் இல்லை, மாதத்திற்கு 1/2)

வாரத்திற்கு - (1-6 முட்டைகள்)

தினமும் - (தினசரி ஒன்று, ஒரு நாளையில் பல முறை)

மொத்தத்தில், ஒரு வாரத்திற்கு 1-6 முறை முட்டைகளை சாப்பிடுபவர்களுக்கான இறக்கும் அபாயமானது, (இதய நோய் இறப்புகளுக்கு 29 சதவீதம் குறைவு மற்றும் ஒட்டுமொத்த இறப்புகளுக்கு 17 சதவீதம் குறைவு) முட்டைகளை எப்போதாவது அல்லது குறைவாக சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினசரி எத்தனை முட்டை சாப்பிடலாம்?

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு ஆரோக்கியமான நபர் தினமும் இரண்டு முதல் மூன்று முட்டைகளை உட்கொள்ள வேண்டும். ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு வாரத்திற்கு 7 முதல் 10 முட்டைகள் வரை சாப்பிடலாம். விளையாட்டு வீரர்கள் அல்லது உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதிக புரதம் தேவை, எனவே அத்தகையவர்கள் நான்கிலிருந்து ஐந்து முட்டைகளை சாப்பிடலாம். தினமும் முட்டை சாப்பிடுபவர்கள் முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டுமே சாப்பிட வேண்டும். இது தவிர, இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது. முட்டை நல்ல கொழுப்பை ஊக்குவிக்கிறது, எனவே கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும் அல்லது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

முட்டையின் பலன்கள்:

தோல், முடி மற்றும் நகங்களுக்கு நன்மை பயக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது

கண்பார்வையை மேம்படுத்துகிறது

நினைவாற்றலை மேம்படுத்துகிறது

எலும்புகளை பலப்படுத்துகிறது

தசைகளை சரிசெய்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. ABP நாடு  எந்த வகையான நம்பிக்கையையோ அல்லது தகவலையோ உறுதிப்படுத்தவில்லை. எந்தவொரு தகவலையும் அல்லது நம்பிக்கையையும் செயல்படுத்துவதற்கு முன், சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

Read Entire Article