Edappadi Palanisamy: முதல்ல இதை பண்ணுங்க.. அப்புறம் வந்து பேசுங்க.. விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!

2 months ago 9
ARTICLE AD
<p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை என&nbsp; எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவரிடம், விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்டதை பற்றி கேட்கப்பட்டது.&nbsp;</p> <p>அதற்கு, &rdquo;<a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>க்கு கள நிலவரம் தெரியவில்லை. அவர் ஊழல் செய்த வழக்கில் சிறை சென்று வந்த செங்கோட்டையனை அருகில் வைத்துக் கொண்டு எங்களை ஊழல் கட்சி என சொல்கிறார். ஜெயலலிதாவை ரோல் மாடல் என சொல்லிக் கொண்டு யாரை அவர் ஊழல் சக்தி&rdquo; என விமர்சிக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
Read Entire Article