ECR சாலையில் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளே உஷார்! முழு விவரம்!

2 months ago 4
ARTICLE AD

"சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செப்டம்பர் 21ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட செய்யப்பட உள்ளதாக தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்"

தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணையம் (SDAT) மற்றும் HCL காப்பிடல் பிரைவேட் லிமிடெட் இணைந்து வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி , இந்திய சைக்கிள் சம்மேளனத்தின் தலைமையில் "சைக்ளோத்தான் சென்னை 2025" நிகழ்ச்சியை நடத்தவுள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழில்முறை மற்றும் மிதிவண்டி ஒட்டிகள் இதில் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் சைக்கிள் பயணத்தையும் சாலை பாதுகாப்பையும் ஊக்குவிப்பதாகும்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்

இந்நிகழ்ச்சி, கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) உள்ள மாயாஜால் மல்டிபிளெக்ஸிலிருந்து தொடங்கி, மாமல்லபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வரை சென்று, மீண்டும் மாயாஜால் மல்டிபிளெக்ஸிலேயே போட்டி நிறைவடையும். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்காக, செப்டம்பர் 21, 2025 அன்று அதிகாலை 04:30 மணி முதல் காலை 08:30 மணி வரை ECR சாலையில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பங்கேற்பாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ள சாலைகள்:

1) சென்னை நகரிலிருந்து மாமல்லபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அக்கரை சந்திப்பிலிருந்து கே.கே. சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்பு ஓ.எம்.ஆர். மற்றும் படூர் வழியாக மாமல்லபுரம் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

2) மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பூஞ்சேரி சந்திப்பிலிருந்து எஸ். எஸ். என். ரவுண்டானா கேளம்பாக்கம் சந்திப்பு நாவலூர் சோழிங்கநல்லூர் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

3) ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

4) அதேசமயம், மாயாஜால் முதல் கோவளம் சந்திப்பு. வரையிலான பக்க சாலை, சைக்கிள் ஓட்டப் பந்தயத்திற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தப்படும்.

எனவே, சீரான போக்குவரத்திற்காக, வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read Entire Article