<p>இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 -2025 ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்நாட்டு பொருளாதாரம் நிலையாக இருப்பது, வேலைவாய்ப்பின்மை ரேட் குறைந்துள்ளது ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.</p>