Donald Trump warning: ”ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காதீங்க” உக்ரைன் போருக்குப் full stop? ஐரோப்பா நாடுகளுக்கு டிரம்ப் வார்னிங்..

3 months ago 4
ARTICLE AD

இந்தியா மீது 50 சதவீத வரி விதித்து உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது தனது கூட்டணி நாடுகளான ஐரோப்பாவுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு தண்டனை – ஐரோப்பாவுக்கு சலுகை?

ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 50% வரி விதித்த டிரம்ப், அதேநேரத்தில் ரஷ்ய எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய நாடுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது சர்வதேச அளவில் கேள்வி எழுப்பியிருந்தது. டிரம்ப்பின் இந்த ஒரு தலைப்பட்ச நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது

"முதலில் ரஷ்யவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள்"

இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 4-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்ற கூட்டணி நாடுகளுடனான உரையாடலில் பேசிய டிரம்ப், “உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு நிதியுதவி கிடைக்கிறது. அதற்கு முக்கியமான ஆதாரம் எண்ணெய் விற்பனையே. எனவே ஐரோப்பா முதலில் ரஷ்யவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார், ரஷ்யாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற, சீனாவையும் அழுத்தத்தில் வைக்க வேண்டும். “சீனாவுக்கு பொருளாதார அழுத்தம் கொடுக்கும்போது தான் ரஷ்யா தளர்ந்து, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவார்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

ஐரோப்பிய தலைவர்களுடனான முக்கிய சந்திப்பு

இந்த சந்திப்பில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த சந்திப்பின் போது டிரம்ப்–ஐரோப்பா இடையே கடும் விவாதங்களும் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புடினுடன் நேரடி பேச்சுவார்த்தை?

பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் விரைவில் பேசப்போகிறேன் எனத் தெரிவித்தார். இதை கிரெம்லின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். “டிரம்ப்–புடின் இடையே விரைவில் சந்திப்பு நடக்க வாய்ப்பு உள்ளது” என அவர் அறிவித்தார்.

வெள்ளை மாளிகையின் விளக்கம்

வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், “ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அதனால் ரஷ்யாவுக்கு பெரும் நிதி ஆதாரம் கிடைக்கிறது. இதைத் தடுக்காமல் உக்ரைன் போரில் வெற்றி பெற முடியாது” எனக் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் விமர்சனம்

டிரம்ப் ஒருபுறம் இந்தியா மீது அதிக வரி விதித்தும், மறுபுறம் தனது கூட்டணி நாடுகளான ஐரோப்பாவுக்கு சலுகை கொடுப்பதாகத் தோன்றும் இந்த நடவடிக்கைகள் உலக நாடுகளின் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. “டிரம்பின் வெளிநாட்டு கொள்கை ஒரே நேரத்தில் தண்டனையும் சலுகையும் வழங்கும் குழப்பமானதாகவே உள்ளது” என்று சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Read Entire Article