சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக பூந்தமல்லி - வடபழனி இடையிலான வழித்தடத்தை தொடங்கி வைத்தார். அவருடன் தமிழக முதல்வர் விஜய் உடனிருந்தார். இந்நிலையில் மெட்ரோ ரயிலின் திறப்பு விழாவில் யார் வேண்டுமானாலும் நிற்கலாம்; ஆனால் அதன் பின்னால் நடந்த போராட்டத்தையும் உழைப்பையும் சொந்தம் கொண்டாட முடியாது என ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.

நிதி தர மறுத்தது பாஜக அரசு

இதுதொடர்பாக திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு மோடி அரசு பணம் கொடுக்க மறுத்த போது ஒன்றிய அரசின் நிதியைக் கோரி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி, தமிழ்நாட்டின் உரிமைக்காகப் போராடியவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!!

இதையும் படிங்க: CM Vijay: சினிமாவில் கூட MGR புகழைப் பேசாத விஜய்.! வாக்குகாக இப்படியா? முன்னாள் எம்.பி. விளாசல்!

ஒன்றிய அரசின் நிதி ஒத்துழைப்பு இல்லாத சூழலிலும், மாநில அரசின் சொந்த நிதியில் திட்டத்தை முன்னெடுத்தது திமுக அரசு. நிதி தர மறுத்தது பாஜக அரசு; நிதிச்சுமையை ஏற்று திட்டத்தைத் தொடர்ந்தது திமுக அரசு. ஆனால் இன்று திறப்பு விழாவில் பிரதமர் மோடி! அவருக்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க விஜய். அன்று மாநிலத்தின் உரிமைக்காகப் போராடிய எங்களை விமர்சித்தவர்கள், இன்று அந்தப் போராட்டத்தின் பலனைப் பறைசாற்றும் விழாவில் பங்கேற்கிறார்கள்.

புகைப்படத்தில் இடம்பிடிப்பது எளிது

விஜய் அவர்களே, அருகில் நிற்பதால் வரலாற்றில் இடம் கிடைத்துவிடாது. புகைப்படத்தில் இடம்பிடிப்பது எளிது; ஒரு திட்டத்துக்காக நிதி கேட்டு, உரிமைக்காகப் போராடி, சொந்த நிதியில் பணியை முன்னெடுப்பதற்குத்தான் அரசியல் துணிச்சல் வேண்டும். மெட்ரோ ரயிலின் திறப்பு விழாவில் யார் வேண்டுமானாலும் நிற்கலாம்; ஆனால் அதன் பின்னால் நடந்த போராட்டத்தையும் உழைப்பையும் சொந்தம் கொண்டாட முடியாது.

வரலாறு புகைப்படத்தை கணக்கில் வைக்காது

மெட்ரோ திட்டத்தை முன்னெடுத்தது திமுக அரசு. நிதிக்காகப் போராடியவர் மு.க.ஸ்டாலின். விழா மேடையில் மோடி இருக்கலாம்; புகைப்படத்தில் விஜய் இருக்கலாம்; ஆனால் இந்தத் திட்டத்தின் பின்னால் தமிழ்நாட்டின் உரிமைக்காகப் போராடிய திமுகவின் உழைப்பு இருக்கிறது. வரலாறு புகைப்படத்தைக் கணக்கில் வைக்காது; யார் உழைத்தார்கள், யார் உரிமைக்காகப் போராடினார்கள் என்பதைத்தான் கணக்கில் வைக்கும் என தெரிவித்துள்ளார்.