DMK YERCAUD CANDIDATE : ஏற்காடு தொகுதி யாருக்கு.? போட்டி போடும் திமுக நிர்வாகிகள்- முன்னிலையில் யார்.?

1 month ago 7
ARTICLE AD

நெருங்கும் தேர்தல்- வேட்பாளர் யார்.?

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் தயாராகி வருகிறது. இதற்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிலும் தொகுதியில் யாருக்கு செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு எப்படி.? என ஆராய்ந்து வருகிறது. மேலும் கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாமா.? தற்போதைய எம்எல்ஏவின் செல்வாக்கு எப்படி உள்ளது, புதிய முகத்திற்கு வாய்ப்பு கொடுக்கலாமா என ரகசிய சர்வே எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மிகவும் முக்கிய தொகுதிகளில் ஒன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தொகுதியாகும்.

ஏற்காடு தொகுதி வரலாறு என்ன.?

தமிழகத்தில் பழங்குடியின தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகள் ஒன்று ஏற்காடு மற்றொன்று சேந்தமங்கலம் தொகுதியாகும்.இந்த தொகுதியில் பெரும்பாலான பகுதிகள் மலைப் பகுதியாகவே உள்ளது. இங்கு முக்கிய தொழில்களாக காபி, பாக்கு, தென்னை,மரவள்ளி கிழங்கு விளைச்சல் முக்கியமாக உள்ளது. இந்த தொகுதியை பொறுத்தவரை அதிமுக திமுக மாறி மாறி வெற்றி பெற்று வருகிறது. அதிலும் கடந்த 4 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவானது தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் சித்ரா திமுகவின் தமிழ் செல்வனை சுமார் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 4 முறை தொடர்ந்து அதிமுகவை வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த முறை யாருக்கு வாய்ப்பு என கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் ஏற்காட்டில் திமுக, அதிமுகவை தவிர்த்து தேமுதிக மற்றும் மநீமக்கு கணிசமாக வாக்குகள் உள்ளது. எனவே இந்த முறை ஏற்காடு தொகுதியை திமுக கைப்பற்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதேநேரம் ஏற்காடு தொகுயில் போட்டியிட திமுகவினர் ஆர்வமாக விருப்பமனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.

ஏற்காடு தொகுதியை கைப்பற்ற போட்டி

திமுக சார்பாக மீண்டும் முன்னாள் எம்எல்ஏ தமிழ்செல்வன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்காடு பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திரன் மற்றும் திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணியினரும் ஏற்காட்டை கைப்பற்ற போட்டி போட்டு வருகிறார்கள். அதே நேரம் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கம் பாளைய ஒன்றிய செயலாளர் சிவராமனும் களத்தில் உள்ளார். இவர் கவுன்சிலராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.

அந்த வகையில் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் தார் சாலை அமைக்கவும், ஒன்றரை கோடி மதிப்பில் மருத்துவமனை அமைய முக்கிய பங்கு வகித்துள்ளார். இதுமட்டுமில்லாமல்  மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தவும் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.  குறிப்பாக ஏற்காடு தொகுதியில் மக்களோடு மக்களாக நெருங்கி பழக்கம் உள்ளதால் திமுக வேட்பாளர் தேர்வில் சிவராமன் பெயர் முன்னிலையில் உள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article