DMK CONGRESS Alliance : திமுகவிற்கு அடிபணிந்த காங்கிரஸ்.! உறுதியானது கூட்டணி.? ஒரே நாளில் ஏற்பட்ட ட்விஸ்ட்

1 month ago 4
ARTICLE AD

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியானது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக, சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் வகையில் திட்டத்தை தீட்டி செயல்படுத்தி வந்தார். ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என நிபந்தனையை விதித்தது. ஒரு கட்டத்தில் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லையென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என காங்கிரஸ் திமுகவை மிரட்டி வந்தது.

காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்யிடம் கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தையையும் நடத்தி வந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மேலிடத்தில் வந்த அழுத்தம் காரணமாக கூட்டணி கட்சிகளோடு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை கடந்த 28ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட், உள்ளாட்சி தேர்தலில் 20% இடம் வழங்க வேண்டும் என்ற பட்டியலை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் திமுகவோ கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துள்ளதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இல்லையென தெரிவித்து விட்டது. மேலும் ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்க முடியும் எனவும் கூறிவிட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த கிரிஸ் சோடங்கர், இனி திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச தான் செல்லவில்லையென தலைமைக்கு கடிதமாகவே கொடுத்துவிட்டார். இந்த சூழலில் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால், தொடரட்டும் இல்லையென்றால் கூட்டணியை விட்டு செல்லட்டும் என்ற முடிவிற்கு திமுக வந்துவிட்டதாகவே கூறப்பட்டது.

இந்தநிலையில் தான் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபல், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என கருத்து கேட்டுள்ளார். அதற்கு பெரும்பாலானவர்கள் திமுக கூட்டணி தான் பெஸ்ட் என தெரிவித்துள்ளனர். ஒரு சில காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமமானது எனவும், பாஜகவைப்பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்காத விஜய்யுடன் எப்படி காங்கிரஸ் கூட்டணி வைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் திமுக ஆதரவு கருத்தை தெரிவித்ததால்,  திமுக தலைமையை சமாதானம் செய்யும் வகையில் இறுதிகட்ட முயற்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை களத்தில் இறக்கினார் சோனியா காந்தி,

அந்த வகையில் நேற்று மதியம் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 27 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்தது. ஆனால் 30 தொகுதிக்கு குறைய கூடாது என ராகுல் காந்தி உறுதியாக இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு மீண்டும் திமுக- காங்கிரஸ் கட்சியிடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் 28  தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனை  இரவோடு இரவாக ப சிதம்பரம் ராகுல்காந்திக்கு தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தரப்பு ஒப்புக்கொண்டதையடுத்து இன்று மதியம் அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகிறது. எனவே இன்று மதியம் திமுகவுடன் முதலில் ராஜ்யசபா சீட ஒதுக்கீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இதனையடுத்து அடுத்தக்கட்டமாக தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செயப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article