<p>இந்தியா முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகையை தமிழ்நாட்டிலும் மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பருப்பு, பாமாயில் உள்ள குடிமைப் பொருட்கள் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. </p>
<p>நியாய விலைக்கடைகளில் மக்கள் தடையின்றி பொருட்களைப் பெற வேண்டும் என்பதற்காக வரும் ஞாயிறு கிழமையில் ( அக்டோபர் 27ம்) தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து முழு நேர மற்றும் பகுதி நேர நியாய விலைக்கடைகள் தடையின்றி செயல்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பணன் தெரிவித்துள்ளார். </p>