Dindigul: மக்களுடன் முதல்வர் திட்டத்துக்காக அரசு பள்ளிக்கு விடுமுறை! பொதுமக்கள் அதிருப்தி

1 year ago 7
ARTICLE AD
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுகுடி, கோட்டையூர், ஆவிச்சிபட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கான மனுக்கள் பெறும் மக்களுடன் முதல்வர் திட்டம் திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி செயலரும் ஊரக வளர்ச்சித்துறை மண்டல அலுவலருமான வீரராகவன், நத்தம் தாசில்தார் சுகந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிறுகுடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறுவதால் பள்ளி வேலை நாளான இன்று அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது. கல்வியில் இந்திய அளவில் முதல் மாநிலமாக திகழ துடிக்கும் தமிழ்நாடு அரசு மாணவர்கள் பயிலும் பள்ளியையே ஒரு திட்டத்துக்காக விடுமுறை விட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Read Entire Article