Dark Edition Car: டார்க் எடிஷன் கார் வாங்க ப்ளானா? பட்ஜெட் தொடங்கி ப்ரீமியம் வரை - கம்மி விலை, டக்கரான மாடல்கள்

2 months ago 5
ARTICLE AD

Dark Edition Car: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கக் கூடிய,  டார்க் எடிஷன் கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டார்க் எடிஷன் கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முற்றிலும் கருப்பு நிறத்தை கொண்ட டார்க் எடிஷன் கார்களுக்கு எப்போது கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக டாடா நிறுவனம் தனது நெக்ஸ் காருக்கு டார்க் எடிஷனை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, பல ப்ராண்டுகளும் டார்க் எடிஷனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. அனைத்து ப்ராண்ட்களும் இந்த கார்களை டார்க் என குறிப்பிடுவதில்லை. உதாரணமாக ஹுண்டாய் நிறுவனம் “நைட்” எனவும், எம்ஜி நிறுவனம் “ப்ளாக்ஸ்டோர்ம்” என்றும், நிசான் நிறுவனம் “குரோ” என்றும் அழைக்கின்றன. இந்நிலையில் 15 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கக் கூடிய டார்க் எடிஷன் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் டார்க் எடிஷன் கார்கள்:

1. நிசான் மேக்னைட் குரோ

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிசான் மேக்னைட் குரோ மாடலானது, ஆல்-பிளாக் எடிஷனில் மலிவு விலையில் வாங்கக் கூடிய கார்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேக்னைட்டின் டாப் ஸ்பெக்கான N கனெக்டாவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள குரோ, அந்த வேரியண்டை காட்டிலும் 31 ஆயிரம் ரூபாய் கூடுதல் விலையை கொண்டுள்ளது. கூடுதல் விலைக்கேற்ப இந்த எடிஷனில் வெளிப்புறத்தில் முழுவதும் கருப்பு நிற வண்ணப்பூச்சு, க்ரில்லில் ப்ளாக் டச், முன் மற்றும் பின்புற ஸ்கிட் ப்ளேட்கள், 16 இன்ச் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்ஸ் டோர் ஹேண்டில்ஸ் மற்றும் ஹெட்லைட்களுக்கு ஸ்மோக்ட் ஃபினிஷ் ஆகியவை கூடுதலாக வழங்கப்படுகின்றன.

உட்புறத்தில் ஆல்-பிளாக் டேஷ்போர்ட், கியர் லிவர், ஸ்டியரிங் வீல், கதவுகள், சன் வைசர்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. கூடுதலாக வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட அமசங்களையும் பெறுகிறது. இதன் விலை ரூ.7.6 லட்சத்தில் தொடங்கி ரூ.9.94 லட்சம் வரை நீள்கிறது.

2. ஹுண்டாய் எக்ஸ்டெர் நைட் எடிஷன்

ஹூண்டாயின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி ஆன எக்ஸ்டரை வாங்குபவர்கள், SX நைட் எடிஷன் முதலே டார்க் எடிஷன் டிரிம்மென்ட்டைத் தேர்வுசெய்யலாம். ரூ.7.78 லட்சம் தொடக்க விலையை கொண்டு SX டிரிம்மை காட்டிலும் ரூ.13,000 கூடுதல் விலையை கொண்டுள்ளது.  எக்ஸ்டர் நைட் எடிஷன்  வெளிப்புறத்தில் 'நைட் எடிஷன்' பேட்ஜிங், முன் பம்பர், பிரேக் காலிப்பர்கள் மற்றும் டெயில்கேட்டில் ரெட் ஆக்செண்ட்ஸை கொண்டுள்ளது. உட்புறமும் கருப்பு நிற அப்ஹோல்ஸ்டரி, சிவப்பு நிற ஸ்டிட்சிங், ஃபுட்வெல் லைட்டிங் மற்றும் பலவற்றுடன் இதே போன்ற தீமை பின்பற்றுகிறது. விலையுயர்ந்த நைட் எடிஷன் டூயல்-டோன் SUVகள் ப்ளாக் ரூஃப் மற்றும் வெளிப்புறத்தில் பல்வேறு வண்ன விருப்பங்களை கொண்டுள்ளன.

3. ஹுண்டாய் i20 நைட்

ஹூண்டாய் i20 கார் மாடலின் டாப் ஸ்பெக் வேரியண்ட்களான ஸ்போர்ட்ஸ் (O), ஆஸ்டா மற்றும் அஸ்டா (O) வகைகளில் டார்க் எடிஷன் கிடைக்கிரது. டாடா ஆல்ட்ரோஸ் போட்டியாளரான இந்த காரின் நைட் எடிஷன் கருப்பு அலாய்ஸ், கருப்பு முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள், கருப்பு வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMகள்) மற்றும் லோகோக்கள் மற்றும் சிவப்பு பிரேக் காலிப்பர்களைப் பெறுகிறது. i20 N லைன் நைட் எடிஷன்கள் கூடுதலாக ப்ளாக் ரூஃப் ரெயில்களை பெறுகின்றன. உட்புறத்தில், நைட் வகைகளில் ப்ராஸ் சிறப்பம்சங்களுடன் முழு கருப்பு அப்ஹோல்ஸ்டரி உள்ளது. முழு கருப்பு i20 வகைகளின் விலைகள் அவை அடிப்படையாகக் கொண்ட வகைகளை விட சுமார் ரூ.10,000-12,000 அதிகம். விலை வரம்பு ரூ.9.15 லட்சத்தில் தொடங்கி ரூ.12.53 லட்சம் வரை நீள்கிறது.

4. ஹுண்டாய் வென்யு நைட் எடிஷன்

நாட்டின் மிகவும் மலிவு விலை நைட் எடிஷன் கார்களின் பட்டியலில் வென்யு மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் விலை ரூ.9.46 லட்சத்தில் தொடங்கி ரூ.12.31 லட்சம் வரை நீள்கிறது. எக்ஸ்டரைப் போலவே, வென்யு நைட் எடிஷனும் பிரகாசமான ரெட் ப்ரேக் காலிப்பர்களுடன் முழு கருப்பு நிற அழகியலைப் பெறுகிறது. இருப்பினும், இது சக்கரங்கள் மற்றும் பம்பர்களில் ப்ராஸ் ஆக்செண்ட்ஸ்களையும் பூட் மூடியில் 'நைட் எடிஷன்' பேட்ஜையும் பெறுகிறது. ப்ராஸ் சிறப்பம்சங்கள் கேபினுக்குள்ள்ளும் கொண்டு செல்லப்படுகின்றன. ஏர்-கண்டிஷன் வென்ட்கள் மற்றும் கியர் லீவரைச் சுற்றி மற்றும் ஸ்டீயரிங் வீலில் ப்ராஸ் டச் காணப்படுகிறது.

5. MG கோமெட் ப்ளாக் ஸ்டார்ம்

கடந்த பிப்ரவரியில் MG Comet மாடலின் ஆல் ப்ளாக் Blackstorm எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது.  டாப்   -ஸ்பெக்  Comet Exclusive  வகையை விட ரூ.43,000 அதிக விலையில், ரூ.9.99 லட்சத்தில், Blackstorm டார்க் எடிஷன் வெளிப்புற மற்றும் உட்புறங்களை (அதன் பெயர் குறிப்பிடுவது போல) மாறுபட்ட சிவப்பு நிற உச்சரிப்புகளுடன் பெறுகிறது. இன்ஜின் மற்றும் வசதிகள் அடிப்படையில், Comet Blackstorm எக்ஸ்க்ளூசிவ் ட்ரிம்மைப் போலவே உள்ளது. இது 17.3kWh பேட்டரியைக் கொண்டு 230 கிமீ ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, Comet Blackstorm இன்று இந்தியாவில் விற்பனையில் உள்ள மலிவான ஆல் ப்ளாக் EV ஆகும். இதன் விலை ரூ.9.99 லட்சம் ஆகும்.

6. டாடா நெக்ஸான் டார்க் எடிஷன்

மேக்னைட் குரோவைத் தவிர, இந்த பட்டியலில் முற்றிலும் ஆல் ப்ளாக் என்ற தீமை மிகவும் உண்மையாகக் கடைப்பிடிக்கும் மாடலாக டாடா நெக்ஸான் டார்க் எடிஷன் திகழ்கிறது. மற்ற SUVகளைப் போலல்லாமல்,  நெக்ஸான் டார்க் எடிஷன்  வெளிப்புறத்தில் முற்றிலும் கருப்பு நிறத்தில் உள்ளது, இரண்டாம் நிலை வண்ண உச்சரிப்புகள் எதுவும் இல்லை.

கேபினிலும் கூட, முழுமையாக கருப்பு நிற டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், ஸ்டீயரிங் வீல் மற்றும் இருக்கை அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் லைட்-அவுட் அழகியல் பராமரிக்கப்படுகிறது. அடர் நீல நிற இருக்கை பின்புறங்கள் மட்டுமே லேசான வண்ணத் தெளிவை வழங்குகின்றன. டார்க் எடிஷன் தொகுப்பு நெக்ஸானின் கிரியேட்டிவ் + வகைகளில் இருந்து ரூ.36,000 கூடுதல் விலையில் கிடைக்கிறது. இதன் விலை வரம்பானது ரூ.10.7 லட்சத்தில் தொடங்கி ரூ.14.05 லட்சம் வரை நீள்கிறது.

7. சிட்ரோயன் ஏர்க்ராஸ் டார்க் எடிஷன்

ஆரம்பத்தில் நிறுவனம் தரப்பில் பசால்ட் மற்றும் C3 ஹேட்ச்பேக்குகளுக்கும் டார்க் எடிஷன் கிடைத்த நிலையில், தற்போது ஏர்க்ராஸ் மாடலுக்கு மட்டுமே ஆல்-ப்ளாக் அம்சங்கள் கிடைக்கிறது. இது பெர்லா நேரா பெயிண்டிங், பிரத்யேக டார்க் பேட்ஜ் மற்றும் டார்க் குரோம் வெளிப்புற டிரிம்களைப் பெறுகிறது. பசால்ட் டார்க் எடிஷனில் வந்த அதே லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, பளபளப்பான-கருப்பு டிரிம் துண்டுகள் மற்றும் சிவப்பு ஸ்டிட்சிங் ஆகியவற்றுடன், ஏர்க்ராஸ் டார்க் எடிஷனின் கேபினிலும் கருப்பு நிற அழகியல் தக்கவைக்கப்பட்டுள்ளது.

ஒளிரும் சில் தகடுகள், சுற்றுப்புற மற்றும் ஃபுட்வெல் விளக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஏர்க்ராஸின் ரேஞ்ச்-டாப்பிங் மேக்ஸ் 5-சீட் வகைகளில் மட்டுமே டார்க் எடிஷன் கிடைக்கும். இதன் விலை வரம்பு ரூ.12.69 லட்சத்தில் தொடங்கி ரூ.13.79 லட்சம் வரை நீள்கிறது.

Read Entire Article