Dahi Wala Paneer: தோசை, சப்பாத்திக்கு ஏற்ற காம்போ; பனீர் க்ரேசி இப்படி செய்து அசத்துங்க!

1 year ago 7
ARTICLE AD

பனீர் ப்ரியர்களா? இது தயிர், பனீர் இரண்டையும் வைத்து சுவையான க்ரேவி குறைந்த நேரத்தில் தயார் செய்துவிடலாம்.

என்னென்ன தேவை?

பனீர் -250 கி

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

சீரக தூள் - 1/2 தூள்

மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

ஊற வைத்த முந்திரி - ஒரு கப்

உப்பு தேவையான அளவு

தயிர் - ஒரு கப்

பேப்ரிக்கா - சிறிதளவு

பச்சை மிளகாய் - 3

கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

கருப்பு மிளகு தூள் - 1 டீ ஸ்பூன்

மேத்தி இலைகள் - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி இலை - தேவையான அளவு

செய்முறை:

பனீர் மசாலா:

பனீர் சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பனீர், உப்பு, மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும். 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். முந்திரியை தண்ணீரில் ஊற வைக்கவும்.

இப்போது தயிர் மசாலா தயாரிக்க வேண்டும். புளிக்காத, கெட்டியான தயிரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதோடு பேப்ரிக்கா, மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு,மிளகு தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இப்போது, அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாய் வைக்கவும். அதில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து ஊறவைத்த பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும். 2 நிமிடங்கள் கழித்து தயிர் கலவையை சேர்த்து கொதிக்க விடவும். இப்போது ஊற வைத்த முந்திரியை நன்றான விழுதாக அரைத்து சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதித்ததும் பனீர் க்ரேவி தயார்.

பனீர் புலாவ்:

தேவையான பொருட்கள்

அரிசி - ஒரு கப்

பனீர் - 1/2 கிகி

வெங்காயம் -இரண்டு

தேங்காய் பால் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

தாளிக்க

சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

நிலக்கடலை / முந்திரி - ஒரு டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

செய்முறை

தேங்காய் பால் எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய்,இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். மிதமான தீயில் அடுப்பில் குக்கரை வைத்து வெண்ணெய் ஊற்றி சூடாகியதும் அதில் பட்டை, சோம்பு, கிராம்பு, முந்திரி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போடவும்.  முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.

பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே அதன் நிறம் மாறும். அப்போது அரிசி, சிறிய துண்டுகளாக நறுக்கிய பனீர்  கிளறவும். இப்போது அரிசிக்கு தேவையான அளவு தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் ஊற்றவும். இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வெண்டைக்காய் ரோஸ்ட் என உங்களுக்கு விருப்பமானதை உடன் வைத்து சாப்பிட தேர்வு செய்யலாம்.

Read Entire Article