Cyber crime: ஆன்லைன் மோசடியில் சிக்கிய விழுப்புரம் மாவட்டம் ; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

7 months ago 5
ARTICLE AD

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதால் இரட்டிப்பு லாபமென பெறலாம் என மோசடி கும்பல் அழைப்பினை ஏற்று பணத்தை இழந்த 35 பேருக்கு 42 லட்சத்து 50 ஆயிரத்து 755 ரூபாயை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வாட்சப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக அடையாளம் தெரியாத நபர்கள் பங்குச்சந்தையில் பெரும் நிறுவனங்களின் பெயரில் டிரேடிங் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறியும் குறைந்தவட்டியில் கடன் தருவதாகவும், பகுதி நேர வேலை மற்றும் டேட்டா என்ட்ரி டைப்பிங் வேலைவாய்ப்பு தருவதாக கூறி பண மோசடி செய்து வந்தனர். இது தொடர்பான புகார்கள் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்தன.

இதில் பணத்தை இழந்த விக்கிரவாண்டியை சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் பகுதி நேர வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி 13 லட்சத்து 71 ஆயிரத்து 813 ரூபாயும் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவரிடம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 972 ரூபாயும் தளவானூர் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவரிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி 49 ஆயிரத்து 400 ரூபாயும் வானூர் பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து என்பவரிடம் 3 லட்சத்து 55 ஆயிரத்து 298 ரூபாயும் என விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மொத்தம் 35 பேருக்கு மாவட்ட இணையதள குற்றப்பிரிவு காவல்துறையினர் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை செய்தனர்.

விசாரனையில் இணையதள மோசடி பேர்வழிகள் பலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவரவே பணம் செலுத்தப்பட வங்கி கணக்கினை முடக்கம் செய்து நீதிமன்றம் மூலம் பொதுமக்கள் இழந்த 42 லட்சத்து 50,755 ரூபாய் மீட்கப்பட்டு பணத்தை இழந்தவர்களுக்கு நேரில் வர வைத்து அவர்கள் இழந்த பணத்தினை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் வழங்கினார்.

பின்பு செய்தியாளர்கள் சந்தித்த விழுப்புரம் எஸ்பி சரவணன் இந்த சமூக வலைதளங்கள் மூலமாக பணத்தை திருடும் கும்பல் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களை குறி வைப்பதால் பொதுமக்கள் எவ்வித அறிமுகம் இல்லாத நபர்களிடம் எந்த காரணத்துக்காகவும் பணம் அனுப்பவும் கூடாது தங்களது வங்கி கணக்கு எண் குறித்த தகவல் அளிக்கக்கூடாது கேட்டுகொண்டுள்ளார்.

பணத்தை இழந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு எல்லைக்குட்பட்ட காவல் நிலையம் மூலம் இணையதள குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்தால் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளின் வங்கி கணக்கை முடக்கம் செய்து பணத்தை மீட்க நடவடிக்கையை செய்யப்படும் எனவும் மோசடி தொடர்பாக 1930 என்ற எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.

சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Read Entire Article