Curry Leaves: சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த கறிவேப்பிலை சாதம் - ரெசிபி இதோ!

1 year ago 7
ARTICLE AD

கறிவேப்பிலையை உணவில் இருந்து தேடி எடுத்து வைக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால், இதில் எவ்வளவு மருத்துவ குணம் இருப்பது தெரிந்தாலும் கருவேப்பிலையை சாப்பிடுவது என்பது அரிதானது. ஆனால், இன்றைய நவீன வாழ்வில் பலரும் ஆர்கானிக் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில், சமையில் மட்டும் கருவேப்பிலை சேர்த்துகொள்ளாமல், தினமும் காலையில் 7-10 கறிவேப்பிலை இலைகளை சாப்பிடுவது நல்லது ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி என்கிறோம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில், 7-10 கறிவேப்பிலை இலைகளை சாப்பிடலாம். இல்லையெனில், தண்ணீரில் இலைகளை போட்டு, நன்கு கொதிக்க வைத்து வடிக்கட்டிய நீரை பருகலாம். மோர் உடன் கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் அரைத்து குடிக்கலாம்.

கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன. தலைமுடி நரைப்பதை தடுப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்குண்டு. இப்படி பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால், கறிவேப்பிலையை தவிர்காதீர்.

என்னென்ன தேவை?

அரிசி – 2 கப்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் – ஒரு சிட்டிகை

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – நன்றாக சுத்தம் செய்து உலர்த்தியது

உளுந்து – 2 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

பூண்டு – 2 பல்

காய்ந்த சிகப்பு மிளகாய் – 5

மிளகு – 5

தேங்காய் – 2 ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

செய்முறை:

அரிசியை நன்றாக சுத்தம் செய்து வேகவைத்து தனியே வைக்கவும். கருவேப்பிலை பொடி, ஒரு வராத்திற்கும் 15 நாட்களுக்கு கெட்டுப்போகாமல் அரைக்க முடியும். தேங்காய் சேர்த்து செய்யப்படும்போது அதிக நாட்கள் வைத்துகொள்ள முடியாது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகள், பூண்டு, மிளகு, மிளகாய், தேங்காய் ஆகியவற்றை நன்றாக எண்ணெய் சேர்க்காமல் வாணலியில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை மிதமான தீயில் கருகாமல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை தனியாக சேர்த்து, நன்றாக அதையும் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக ஆறவைக்கவும்.

ககாய்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு, கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ரொம்ப நைஸாக அரைக்க வேண்டாம். கறிவேப்பிலையை கடைசியாக சேர்த்து அரைக்க வேண்டும்.

மற்றொரு கடாயில், எண்ணெயை சூடாக்கி, கடுகு, பெருங்காயம், வறுத்த வேர்க்கடலை அல்லது முந்திரி சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் வேகவைத்த சாதம் மற்றும் கறிவேப்பிலை பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான கறிவேப்பிலை சாதம் தயார்.

கறிவேப்பிலையை சமையிலில் சேர்பதை தவிர, கருவேப்பிலை பொடி, சட்னி, அடை உள்ளிட்டவற்றில் சேர்க்கலாம். கறிவேப்பிலையை முழுதாக சாப்பிடுவதை விரும்பாதவர்கள், இட்லி பொடியில் சிறிதளவு கறிவேப்பிலையைச் சேர்த்துகொள்ளலாம். கறிவேப்பிலை குழம்பு, துவையல் என வாரத்திற்கு இரண்டு முறை இந்த வகை உணவுகளை செய்து சாப்பிடலாம். ஆரோக்கியமாக சாப்பிடுங்க!

Read Entire Article