CSK: டாடி ஆர்மி டூ பேபி ஆர்மி... மாற்றம் முன்னேற்றம்! விழித்துக்கொண்ட சிஎஸ்கே

7 months ago 5
ARTICLE AD

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது, குறிப்பாக அனுபவத்தை மட்டுமே இந்த சீசனில் களமிறங்கிய சென்னை அணிக்கு மிகப்பெரிய சவுக்கடியாக இந்த சீசன் அமைந்த நிலையில் தற்போது அதில் இருந்து பாடத்தையும் கற்றுக்கொண்டது.

டாடி ஆர்மி ஃபார்மூலா:

2008 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் வெற்றிக்கரமாக அணியாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது(2010,11,2018,2021,23) சாம்பியன் பட்டத்தை வென்றது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது  மிக நெருக்கமாக வெற்றியது இன்றளவும் உள்ளது. இரண்டு ஆண்டுக்கால தடைக்கு பிறகு சென்னை அந்த சீசனில் களமிறங்கியது.

அந்த சீசனில் மூத்த வீரர்களை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியதால் அவர்களை டாடிஸ் ஆர்மி என்று கிண்டலடித்தனர், ஆனால் அணியின் உரிமையாளரான என் ஸ்ரீனிவாசன் தோனிக்கு அனுபவத்தில் மேல் மிகப்பெரியை நம்பிக்கை உள்ளது. இந்த அணி என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்னார். சொன்னப்படியே தோனி தனது வாக்கை காப்பாற்றினார். அடுத்த ஆறு சீசனில் சென்னை அணி மூன்று ஐபிஎல் சீசன்களை வென்று அசத்தியது.

புளித்துப்போன ஃபார்மூலா:

ஆனால் இந்த டாடி ஆர்மி ஃபார்மூலா கடந்த சீசனில் இருந்து சென்னை அணிக்கு எடுப்படாமல் போனது, ,மற்ற அணிகள் இளம் வீரர்களை வைத்து அதிரடியாக ஆரம்பித்துள்ள நிலையில் சென்னை அணிக்கு அனுபவம் இந்த சீசனில் சுத்தமாக எடுப்படவில்லை. இந்த வருடம் அனுபவம்  வாய்ந்த வீரர்களான ராகுல் திரிப்பாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், அஸ்வின் சென்னை அணிக்கு மிகப்பெரிய நாமத்தை போட்டனர், இதனால் நடப்பு சீசனில் சென்னை 10வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் காயம் காரணமாக விலக தோனியிடம் கேப்டன்சி பதவி கொடுத்த போதும் சென்னை அணியால் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியவில்லை.

மாற்றத்தை நோக்கி:

சென்னை அணியின் தொடர் தோல்வியினால் அணியின் ரசிகர்களும் கடுமையாக விமர்சனங்களை அணியின் மீது எடுத்து வைத்து வந்தனர், மற்ற அணிகளில் இளம் வீரர்களை களமிறக்கி வெற்றியை பெற்று வரும் நிலையில் சென்னை அணி மட்டும் பழைய பஞ்சாங்கத்தை வைத்து உருட்டுகிறது என்கிற விமர்சனமும் எழுந்தது.

சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் இருந்தும், வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது, ஆனால் ரசிகர்களின் அழுத்தம் மற்றும் எதிர்க்காலத்தை மனதில் வைத்து சென்னை அணி தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கி வருகிறது. ஷேக் ரசீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் துவண்டு கிடக்கு சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். டாப் ஆர்டரில் இருக்கும்  குறைகளை ஓரளவு குறைந்துள்ளது, அதே போல 21 வயதான டேவால்ட் பிரேவிஸ் திரிப்பாதிக்கு பதிலாகவும், மோசமான ஃபார்மில் இருக்கும் விஜய் சங்கருக்கு பதிலாக வன்ஷ் பேடி அல்லது ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய இருவரில் யாராவது ஒருவரை சேர்த்துக்கொள்ளலாம்.

அதேப்போல பந்துவீச்சிலும் 20 வயதான நூர் அகமது, மதிஷா பதிரானா ஆகியோரும் இளம் வீரர்களாக இருப்பதால் சென்னை அணி வருங்காலத்தை எண்ணி தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க ஆரம்பித்துள்ளதால் சென்னை டாடி ஆர்மி விட்டுவிட்டு பேபி ஆர்மியை கட்டமைக்க ஆரம்பித்துள்ளது.

Read Entire Article