CSK vs SRH stats IPL 2025: சிஎஸ்கே Vs ஐதராபாத், கம்மின்ஸா? கெய்க்வாட்டா? எந்த அணி ஆதிக்கம்? ஐபிஎல் வரலாறு

9 months ago 8
ARTICLE AD

CSK vs SRH stats IPL 2025: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில், ஆதிக்கம் செலுத்துவது யார் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025:

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அபாரமாக செயல்பட்டு மூன்றவாது சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வசப்படுத்தியுள்ளது. அதன் மகிழ்ச்சியை கொண்டாடி முடிப்பதற்குள், இன்னும் 10 நாட்களில் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2025 எடிஷன் தொடங்க உள்ளது. கோடைகாலம் முடியும் வரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த போட்டி விருந்தாக அமைய உள்ளது. குறிப்பாக சென்னை அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றுமா என எதிர்பார்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான, வரலாறு எப்படி உள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

சென்னை Vs ஐதராபாத்:

சென்னை அணி கடந்த 2008ம் ஆண்டு முதலே ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதேநேரம், ஐதராபாத் அணியோ கடந்த 2012ம் ஆண்டு முதல் தான் பங்கேற்று வருகிறது. சென்னையை சேர்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சென்னை அணியின் உரிமையை கொண்டிருக்க, அதே சென்னையை சேர்ந்த கலாநிதிமாறனின்  குடும்பத்தினர் தான் ஐதராபாத் அணியின் உரிமையை கொண்டுள்ளனர்.

நேருக்கு நேர்:

இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 15 முறையும், ஐதராபாத் அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் மோதிய போட்டியில், சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சேப்பக்கத்தில் இதுவரை ஐதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கிய, 5 போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுகளில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டிலுமே சென்னை அணி தான் வாகை சூடியுள்ளது.

அதிபட்ச ரன்கள், விக்கெட்டுகள்:

ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 223

ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 132

சென்னை அணிக்கு எதிராக ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 192

சென்னை அணிக்கு எதிராக ஐதராபாத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 134

இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிக ரன் சேர்த்த வீரர் - வில்லியம்சன் (471 ரன்கள்)

இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் - பிராவோ (18 விக்கெட்டுகள்)

ஐதராபாத் அணியின் ஆறாதவடு:

2018ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் ஆசையோடு, ஐதராபாத் அணி இறுதிப்போட்டியில் களமிறங்கியது. ஆனால், இரண்டு வருட தடைகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கி ஆச்சரியமளித்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 178 ரன்களை குவிக்க, ஷேன் வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி இலக்கை எட்டியது. இது ஐதராபாத் அணிக்கு  இன்றளவும் ஆறாத வடுவாகவே தொடர்கிறது.

நடப்பாண்டு கம்மின்ஸ் சாதிப்பாரா?

நடப்பாண்டில் இரு அணிகளும் ஒரே ஒருமுறை மட்டுமே மோத உள்ளன. அதன்படி, சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி,  ஏப்ரல்.25 அன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி இந்த போட்டியில் வென்று, சேப்பாக்கம் மைதானத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யுமா? அல்லது தங்களது கோட்டையில் ஐதராபாத் அணிக்கு எதிராக கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி ஆறாவது வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Read Entire Article