CSK vs KKR: சென்னை - கொல்கத்தா மேட்ச் பார்க்க போறீங்களா? - மெட்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

18 hours ago 1
ARTICLE AD

ஐபிஎல் தொடரில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி ஏப்ரல் 14ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து வசதிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு சலுகை

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஐபிஎல் 2026 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கலாம்.

பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தடையற்ற பயணத்தை வழங்கவும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்காக, பிரத்யேக மெட்ரோ பயணங்களை வழங்க முன்வந்துள்ளது.

அதன்படி அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டி ஏப்ரல் 14ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக ரசிகர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணங்களும், கூடுதல் மெட்ரோ இரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்த மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

கூடுதல் சிறப்பு பயண சேவை விவரம்

அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மட்டுமே வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.பயணிகள் கடைசி மெட்ரோ இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஐபிஎல் போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read Entire Article