<p><strong>CSIR UGC NET Exam:</strong> ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத சூழல் மற்றும் லாஜிஸ்டிக் சிக்கல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 25 முதல் 27 வரை திட்டமிடப்பட்டிருந்த CSIR-UGC-NET கூட்டுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ஒத்திவைத்து அறிவித்துள்ளது. தேர்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணை அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>