புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட பாட்டி சாராயத்துடன் இருவர் சீர்காழி அருகே கைதாகியுள்ளனர்.

தொடரும் மதுபான கடத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மிக அருகில் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளது. காரைக்காலில் மதுபானங்களின் விலை குறைவு என்பதாலும், அங்கு எளிதில் சாராயம் கிடைப்பதாலும், அங்கிருந்து மதுபானம் மற்றும் சாராயங்கள் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை நடைபெறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் மேற்கொண்டாலும், அவர்களின் கண்களில் மண்ணைத்துவம் விதமாக சாராயம் மட்டும் மதுபான கடத்தலை தடுத்து நிறுத்த முடியாத வண்ணம் கடத்தல் காரர்கள் தொடர்ந்து கடத்தல் ஈடுபடுகின்றன.

Bose Venkat : சினிமா நடிப்பு , பள்ளிக்கூட ஒப்பிப்பு... மாநாட்டில் விஜய் உரை பற்றி போஸ் வெங்கட்

தீபாவளி அடுத்து சிறப்பு சோதனை

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. இந்த புகாரை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சாராயம் மற்றும் மதுபான பாட்டில்கள் கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

New Maruti Dzire: தேதி இதுதான்..! அறிமுகமாகிறது மாருதி டிசைர் - ஸ்விஃப்டை விட மேம்பட்ட அம்சங்கள் இருக்கா?

காரைக்கால் டூ மயிலாடுதுறை

இந்த சூழலில் காரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரும்பாக்கம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் ஜெயா தலைமையிலான காவல்துறையினர் கொங்கராயன் மண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சந்தேகத்திற்கு இடமான வகையில் பதிவு எண் இல்லாத டிவிஎஸ் அப்பாச்சி இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

TNPSC Group 4 Result 2024: வரலாற்றில் முதல்முறை.. இன்னும் 2 நாட்களில் வெளியாகிறது குரூப் 4 தேர்வு முடிவுகள் - டி.என்.பி.எஸ்.சி

100 மதுபாட்டில்கள் பறிமுதல்

அப்போது மூட்டை ஒன்றில் 100 குவாட்டர் புதுச்சேரி சாராய பாட்டில்கள் இருந்துள்ளது, அவை தரங்கம்பாடி தாலுக்கா அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் சாராய பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், சாராய பாட்டில்களை கடத்தி வந்த அரும்பாக்கம் கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் என்பவரது 34 வயதான வீரமணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது 20 வயதான மகன் ஸ்டாலின் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் சாராய வியாபாரி பிரேம்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

South Indias UNESCO Heritage: தென்னிந்தியாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்: சோழர் கோயில்கள் முதல் மகாபலிபுரம் வரை