Crime: என் புருஷனை உயிரோட விடாத..! கள்ளக்காதலனுக்கு ஆர்டர் போட்ட மனைவி, ஆணுறுப்பின் மீது அட்டாக்

3 months ago 4
ARTICLE AD

Affair Murder: காதலனுடன் சேர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர், போலீசில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்த்தில் தற்கொலை செய்துள்ளார்.

சொதப்பிய மனைவியின் பலே திட்டம்:

கர்நாடக மாவட்டம் விஜயபுரா மாவட்டத்தில் இண்டி நகரில் உள்ள அக்கமஹாதேவி பகுதியில் நடந்த, துரோகம் மற்றும் கொலை சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்த நிகழ்வில், திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் காதலனுடன் சேர்ந்து, நள்ளிரவில் தனது கணவனையே கொல்ல திட்டமிட்டுள்ளார். அதிருஷ்டவசமாக அந்த நபர் தப்பிய நிலையில், போலீசில் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் அந்த பெண்ணின் காதலனே தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

நள்ளிரவில் கொலை முயற்சி:

விவசாயியான பீரப்பா தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவ்வப்போது ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளை தாண்டி, இவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றுகொண்டிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த செப்டம்பர் 1ம் தேதி நள்ளிரவில், பீரப்பாவின் மார்பின் மீது ஏறி அமர்ந்து அவரது கழுத்தை நெறித்த சுனந்தா, ஆணுறுப்பையும் தாக்கி நிலையகுலைய செய்ய முயற்சித்துள்ளார். அதோடு,அருகிலிருந்த மற்றொரு நபரை நோக்கி,எனது கணவனை விடாதே கொன்றுவிட எனவும் கட்டளையிட்டுள்ளார்.

உயிரை காப்பாற்றிக்கொள்ள முயன்ற பீரப்பா, அருகிலிருந்து கூலரை உதைக்க அது உரத்த சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த சத்தக் கேட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 8 வயது மகன் எழுந்ததோடு, அக்கம்பத்தினரும் அங்கு குவிய தொடங்கினார். இதனை கண்ட வீட்டில் இருந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால், கடைசி நேரத்தில் பீரப்பாவின் உயிர் தப்பியுள்ளது. தொடர்ந்து, அவர் அளித்த தகவலில் தான், வீடு புகுந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர், சுனந்தாவின் கள்ளக் காதலனான சித்தப்பா என்பது தெரிய வந்துள்ளது.

மனைவியின் நாடகம்:

சம்பவத்தை விளக்கிய பீரப்பா, “சம்பவத்தின் போது இருவரும் சேர்ந்து எனது வாயை மூடி கழுத்தை நெறுக்கினர். நான் மூச்சு விட முடியாமல் தவித்தேன். பின்பு நான் குளிர்சாதன பெட்டியை உதைத்தன் மூலம் பெரும் சத்தம் ஏற்பட்டது. இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் போதும் என மனைவி அருகிலேயே இருந்தும், மிகவும் அமைதியாக இருந்ததை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால், அங்கு எதுவுமே நடைபெறாததை போன்று, திடீரென ஏன் இப்படி கத்துகிறீர்கள்? என என்னை நோக்கி கேள்வி எழுப்பி நடித்தார்” என விளக்கியுள்ளார்.

சித்தப்பா ஒப்புதல் வாக்குமூலம்

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், சித்தப்பா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கொலை முயற்சி நடக்கும்போது அல்லது நடந்து முடிந்த பிறகு பதிவு செய்யப்பட்ட காட்சிகள் சுனந்தாவின் குரலுடன் இடம்பெற்றுள்ளது. மேலும், ”சுனந்தாவும் நானும் கடந்த இரண்டரை வருடங்களாக உறவில் இருக்கிறோம். எங்கள் நிலங்கள் அருகருகே இருந்ததால் பழக்கம் ஏற்பட்டது. சுமார் ஒன்றரை வருடங்களுக்குப முன்பு, அவர்கள் தங்கள் நிலத்தை விற்று இண்டி நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். அவரது திட்டத்தின் பெயரிலேயே இந்த கொலை முயற்சி அரங்கேறியது. ஆனால், இப்போது முழு பழியையும் என் மீது சுமத்த பார்க்கிறார். நான் தவறு செய்யவில்லை என்று காவல்துறையிடம் முழுமையான வாக்குமூலம் அளித்தாலும், சட்டம் பெண்களுக்கு சாதகமாக இருப்பதால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் இறந்தால், அவள் மட்டுமே நேரடியாகப் பொறுப்பாவாள்" என்று சித்தப்பா தெரிவித்து இருந்தார்.

சித்தப்பா தற்கொலை:

இந்நிலையில் தான் அக்கமஹாதேவி பகுதியில் உள்ள வனத்தில்,  மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சித்தப்பா பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலை போலீசார் கைப்பற்றியுள்ள நிலையில், சுனந்தாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, சுனந்தா தனது காதலன் சித்தப்பாவுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் தொடர்ந்து பேசி வந்ததை அறிந்து பீரப்பா கண்டித்துள்ளார். இதன் பிறகு இருவரும் பேசிக்கொள்வதில்லை என நம்பியுள்ளார். ஆனால், ரகசியமாக தனது தகாத உறவை தொடர்ந்து வந்த சுனந்தா, கணவனை கொன்றுவிட்டு சித்தப்பா உடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். அதன்படி, மேற்கொண்ட முயற்சி தோல்வி அடையவே, சித்தப்பா அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சுனந்தாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Read Entire Article