மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது புர்பா மெதினிபுர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் பன்ஸ்குரா. இந்த நகரத்தில் 13 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தான். அந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். அங்குள்ள பகுல்டா பள்ளியில் படித்து வந்தான்.

சிப்ஸ் பாக்கெட் எடுத்த சிறுவன்:

இந்த சிறுவன் நேற்ற அப்பகுதியில் உள்ள கோசைன்பெர் சந்தைக்குச் சென்றுள்ளான். அந்த சந்தையில் சுபங்கர் தீக்ஷித் என்பவர் கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்குச் சென்ற அந்த சிறுவன் 3 சிப்ஸ் பாக்கெட்டுகளை எடுத்து வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடைக்கு வந்த சுபங்கர் தொலைவில் சிப்ஸ் பாக்கெட்டுடன் நின்று கொண்டிருந்த சிறுவனிடம் சென்று கேட்டுள்ளார்.

அப்போது, அந்த சிறுவன் சுபங்கருக்கு ஒரு சிப்ஸ் பாக்கெட் 5 ரூபாய் என்றாலும் ரூபாய் 20 கொடுத்துள்ளான். பின்னர், அந்த சிறுவனை கடைக்கு அழைத்துச் சென்று எஞ்சிய சில்லறையையும் கொடுத்துள்ளார். பின்னர், அந்த சிறுவனை அந்த சந்தையில் நின்று கொண்டிருந்த அனைவர் முன்பும் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.

சிறுவன் தற்கொலை:

தகவல் அறிந்த சிறுனின் தாய் அந்த கடைக்கு அவனை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்த சிறுவன் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சித்துள்ளான். இதையடுத்து, உயிருக்கு போராடும் அவனை கண்ட அவனது குடும்பத்தினர் அவனை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

அம்மா நான் திருடவில்லை:

மேலும், தற்கொலை செய்து கொண்ட சிறுவன் தான் தற்கொலை செய்வதற்கு முன்பு அம்மா நான் திருடவில்லை என்று தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். திருட்டுப் பட்டம் விழுந்ததால் அவமானம் தாங்க முடியாத 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு அந்த கடைக்காரரே காரணம் என்று உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)