Crime News: உறவினரை காதலித்த இளம்பெண்.. மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொன்ற குடும்பம்!

2 months ago 9
ARTICLE AD

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தூரத்து உறவினரை திருமணம் செய்ய விரும்பிய பெண்ணை தந்தை மற்றும் சகோதரன் இணைந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு 19 வயது தான் ஆகியுள்ளது. அங்கிருக்கும் தோர்ஹான்ஸ் கிராமத்தில் கடந்த ஜனவரி 30ம் தேதி வீட்டில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் இறந்ததாக குடும்பத்தினர் அவசர உதவி எண் 112க்கு போன் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

அப்போது அந்த பெண்ணின் வருங்கால கணவர் பரமேஷ்வர் பதக் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு அந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் சந்திர பிரகாஷ் மற்றும் சகோதரர் ராகுல் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் இருவர் மீதும் போலீசார் சந்தேகப் பார்வை திரும்பியது.

அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். புகார் அளித்த பரமேஸ்வர் பதக் தங்களுடைய தூரத்து உறவினர் என்றும், அவரை திருமணம் செய்ய இந்த பெண் விரும்பியதாகவும், அதற்கு மறுத்த நிலையில் முற்றிய தகராறில் இந்த கொலை நடந்ததாகவும் அவர்கள் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதன்படி ஜனவரி 30ம் தேதி அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி பரமேஸ்வர் பதக்கை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இது தெரிந்த சந்திர பிரகாஷ் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அப்பெண்ணை ஒரு அறையில் அடைத்து வைத்ததோடு மட்டுமல்லாமல் கை, கால்களை கட்டி மின்சார கேபிள் மூலம் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

ஆனால் அந்த பெண் காதலித்த நாட்களில் தான் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனுக்கு மிகவும் பயப்படுவதாகவும், அவர்கள் தன்னை ஏதாவது செய்யக்கூடும் என கடிதம் எழுதி பரமேஸ்வரிடம் கொடுத்திருக்கிறார். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பரமேஸ்வர் பதக் புகார் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த கொலை சம்பவம் வெளியே தெரிந்திருக்காது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையை விபத்தாக சித்தரிக்க ஒரு பழுதான அயர்ன் பாக்ஸை வைத்ததும் போலீசாஅர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மப்ளர், துப்பட்டா, மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article