CPIM Slams TN Governor: "வள்ளுவரை சனாதனியாக்குவதா? ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்" கொதித்தெழுந்த சிபிஐ(எம்)

5 days ago 2
ARTICLE AD

எம்மதத்தையும் சாராத வரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல் என்று சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சண்முகம் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகருக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார்.

வள்ளுவருக்கு காவி பெயிண்ட் - கிளம்பிய புதிய சர்ச்சை:

சென்னை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் (லோக் பவன்) நேற்று நடைபெற்ற வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள் விழாவில், ஆளுநர் அர்லேகர் கலந்து கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் திருவுருவப் படம், வழக்கமான வெள்ளை உடைக்கு மாறாக காவி உடை தரித்தவாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்திய புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

சிபிஐ(எம்) கண்டனம்:

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழ்நாடு மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பெ சண்முகம், ஆளுநரை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என சமத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவரை சனாதனி என்று வரையறுக்கும் தமிழ்நாடு ஆளுநரின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது.

எம்மதத்தையும் சாராத வரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல், இதற்கு ஆளுநர் அர்லேகர் இச்செயலுக்காக தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வைகோ கண்டனம்:

ஆளுநரின் செயலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது "என்ன திமிரும் அகம்பாவமும் இருந்தால், தமிழ்நாட்டிற்குள் வந்து, தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகையிலேயே அமர்ந்துகொண்டு இத்தகைய துரோகத்தைச் செய்வார்கள்? திருவள்ளுவருக்குக் காவி உடையை அணிவிப்பதன் மூலம் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டாரா ஆளுநர்? தமிழ் மண் இத்தகைய ஆதிக்கப் போக்குகளை என்றும் சகித்துக் கொள்ளாது. ஆளுநர் அர்லேகர் செய்த இந்தச் செயல் ஒருபோதும் மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

அமைச்சர் கண்டனம்:

ஆளுநர் மாளிகையில் நடந்த சம்பவத்திற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம்.

Read Entire Article