CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?

4 months ago 5
ARTICLE AD

தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ், குடியரசு துணைத்தலைவர் ஆகும் முதல் தமிழர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர் ஆக உள்ளார் சி.பி. ராதாகிருஷ்ணன்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர், வாழ்க்கை, அரசியல், பணி குறித்து இங்கே பார்க்கலாம்.

கொங்கு மண்டலம், திருப்பூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு சந்திராபுரம் சொந்த ஊர். 1957ஆம் ஆண்டு பிறந்தார் ராதாகிருஷ்ணன். தந்தை பொன்னுசாமி. தாய் ஜானகி. தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி கல்லூரியில் பிபிஏ படித்தார் ராதாகிருஷ்ணன்.

டேபிள் டென்னிஸ் சாம்பியன்

விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக ராதாகிருஷ்ணன் இருந்தார். அவர் தனது கல்லூரிக் காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப் பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் வாலி பால் ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகள்.

பள்ளிக் காலத்திலேயே 16 வயதில் ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்த ராதாகிருஷ்ணன், பாரதிய ஜன சங்கத்திலும் இருந்துள்ளார். அவசரநிலை காலகட்டத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். ஜன சங்கத்தில் இருந்த ராதாகிருஷ்ணன், பின்பு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 1996-ல் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பாஜகவின் முக்கிய வெற்றி

1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன், 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 1999 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். ஐ.நா. சென்ற நாடாளுமன்றக் குழுவிலும் இருந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் இணக்கமான உறவில் இருந்தார்.

ஆனாலும் அதற்குப் பிறகு போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் தோல்வி அடைந்தார் ராதாகிருஷ்ணன். எனினும் 2004 முதல் 2006 வரை பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அப்போது ஜெயலலிதாவிடம் பேசி அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கப் பாலமாகவும் செயல்பட்டார்.

19 ஆயிரம் கி.மீ. யாத்திரை

தலைவராக கன்னியாகுமரி வரை ரத யாத்திரையில் நடைப் பயணம் மேற்கொண்டார். இந்திய நதிகளை இணைக்க வேண்டும், தீண்டாமையை ஒழிக்க வேண்டும், தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் 93 நாட்கள் இந்த யாத்திரை, 19 ஆயிரம் கி.மீ. தூரம் நீண்டது.

2014ஆம் ஆண்டு கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சிபிஆர், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 2016 முதல் 20ஆம் ஆண்டு வரை, இந்திய தென்னை நார் வாரியத் தலைவராகப் பணியாற்றினார்.

4 மாநில ஆளுநர்

தொடர்ந்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த அவருக்கு 2023-ல் ஜார்க்கண்ட் ஆளுநர் பதவி தேடி வந்தது. 2024-ல் தமிழிசை செளந்தர்ராஜனின் ராஜினாமாவுக்குப் பிறகு, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பொறுப்பு ஆளுநராகவும் சி.பி. ராதாகிருஷ்ணன் பணியாற்றினார். தற்போது மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

குடும்பம்

1985-ஆம் ஆண்டு சுமதி என்பவரை சிபிஆர் மணந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தங்களின் செல்வாக்கை உயர்த்தவும் கொங்கு மண்டலத்தைத் தங்கள் வசப்படுத்தவும் சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்தக் கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் உள்ளதால், இவரே பெரும்பாலும் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article