தென்மேற்கு பருவமழையால் குற்றால சீசன் தொடங்கவுள்ள நிலையில் பழைய குற்றால அருவியில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தென்னிந்தியாவின் ஸ்பா

இந்தியா இயற்கை வளங்கள் நிறைந்த நாடு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்ற அளவுக்கு பலவிதமான நம் மனதை கவரும் சுற்றுலாத்தலங்கள் உள்ளது. அப்படியாக தென்னிந்தியாவின் ஸ்பா என அழைக்கப்படுவது தான் குற்றாலம். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த குற்றாலத்தில் ஏராளமான அருவிகள் உள்ளது. அதேசமயம் தனியார் அருவிகளும் செயல்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை - குற்றால சீசன்

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்த அருவிகள் அமைந்துள்ளது. பேரருவி, சிற்றருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி போன்ற அருவிகள் உள்ளது. இதில் பாதுகாப்பு கருதி தேனருவி மற்றும் செண்பகாதேவி அருவிகளுக்கு செல்ல அனுமதி கிடையாது. இதனைத் தவிர தனியார் இடங்களிலும் அருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றலாத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை தான் பிரதானமானதாகும். இங்கு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் காலமாகும்.

பழைய குற்றால அருவியில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

இந்த நிலையில் குற்றால அருவிக்கு உள்ளூர் முதல் வெளிநாட்டில் உள்ள மக்கள் வரை சீசன் காலங்களில் வருகை தருவார்கள். கடந்த 2024ம் ஆண்டு பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது கணிக்க முடியாமல் இருந்த நிலையில் தற்போது வனத்துறையினர் எச்சரிக்கை அலாரம் பொருத்தியுளனர்.

Also Read: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!

வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் குற்றால அருவிகளிலும் குளிக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பேரருவி எனப்படும் மெயினருவியில் தற்போது புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால் இந்த சீசனுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பழைய குற்றால அருவியில் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, “8 மாத சீரமைப்பு பணிகளுக்குப் பின் கடந்த மே 28ம் தேதி பழைய குற்றாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுகிறது. சீசன் தொடங்கியவுடன் பொதுமக்கள் அருவிக்கு செல்ல நபர் ஒருவருக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. மேலும் வெள்ள நீர் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதைக்கு செல்லாத வாறு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. புது தடுப்பு கம்பிகள், 5 உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.