Coolie Vs Jananayagan: அடிச்சு விட்ட ஃபேன்ஸ், தள்ளாடும் கூலி? பென்ச் மார்க் செட் செய்த விஜய், ஜனநாயகனின் மாஸ் பிசினஸ்

10 months ago 11
ARTICLE AD

Coolie Vs Jananayagan: ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம், ரூ.81 கோடிக்கு விற்பனையானதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் கூறப்படுகிறது.

கூலி Vs ஜனநாயகன்:

அரசியலில் நுழைந்துள்ள விஜயின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஜனநாயகன் திரைப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் மட்டுமின்றி வெகுஜன மக்களும் மிகவும் ஆரவமுடன் காத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

மறுமுனையில் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் உருவாகி வரும் கூலி திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது. கூலி மற்றும் ஜனநாயகன் திரைப்படங்கள் நேரடியாக திரையில் மோதிக்கொள்ளாவிட்டாலும், வசூலில் சாதிக்கப்போவது விஜயா? ரஜினியா? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கூலி திரைப்படம் ரூ.81 கோடிக்கு விற்பனையா?

சில தினங்களுக்கு முன்பாக, கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்பனையானதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சினிமா செய்திகளை தினந்தோறும் வெளியிட்டு வரும் வலைப்பேச்சு குழு, கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் விற்பனை தொடர்பாக பேசியுள்ளது. அந்த குழுவின் தகவல்களின்படி, “கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் தற்போது வரை (ஜுன்.19 மாலை) விற்பனை செய்யப்படவில்லை. ஒரு நிறுவனம் ரூ.70 கோடிக்கும் மற்றொரு நிறுவனம் ரூ.73 கோடிக்கும் உரிமத்தை கேட்டு வருகிறது. கூலி திரைப்படம் வெளியாக உள்ள ஆகஸ்ட் 15ம் தேதியன்று, ரித்திக் ரோஷன் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர்., நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 திரைப்படமும் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் இந்தி திரைப்படங்களுக்கே அதிகம் முன்னுரிமை அளிக்கப்படுவதால், கூலி திரைப்படம் சுமார் 70-73 கோடிக்கு மேல் விற்பனையாக வாய்ப்பில்லை” என வலைபேச்சு குழு தெரிவித்துள்ளது.

பென்ச் மார்க் செட் செய்த விஜய்

அதேநேரம், ஏற்கனவே வசூல் அடிப்படையில் விஜய் தான் தமிழ் சினிமாவின் முதன்மையான நடிகராக திகழ்கிறார். இந்நிலையில் அவரது கடைசி படம் என்பதால், ஜனநாயகன் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது. அதனை நிரூபிக்கும் விதமாக தான், அடுத்த ஆண்டு வெளியாக உள்ள ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமையை, ஏற்கனவே ஒரு பிரபல நிறுவனம் 80 கோடி ரூபாயை கொடுத்து வாங்கிவிட்டதாக வலைபேச்சு குழு தெரிவித்துள்ளது. அதன்படி, இதற்கு முன்னதாக எந்தவொரு தமிழ் சினிமாவின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையும், இவ்வளவும் பெரிய தொகைக்கு விற்பனையானதில்லை என்பதே கோடம்பாக்க வட்டார தகவல்கள். ஒட்டுமொத்த வெளிநாடுகளுக்கான வெளியீட்டு உரிமையை பெற்ற அந்த நிறுவனத்திடம் இருந்து, மலேசிய வெளியீட்டு உரிமையை மட்டும் மற்றொரு நிறுவனம் 12.5 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகனின் மாஸ் பிசினஸ்

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அரசியல் சார்ந்த படமாக உருவாகி வரும், ஜனநாயகனில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை, கர்நாடகாவைச் சேர்ந்த KVN  நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் ஒடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் 121 கோடிக்கும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவி ரூ.55 கோடிக்கும் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ஆடியோ ரைட்ஸை T-series நிறுவனம் ரூ.35 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், வெளிநாட்டு உரிமம் ரூ.80 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வலைபேச்சு குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, கிட்டத்தட்ட 300 கோடி ரூபாயை ஈட்டி தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை உறுதி செய்துள்ளது. அதோடு, வசூலை பொறுத்தவரையில் இன்றைய சூழலில் விஜய் தான் மீண்டும் நம்பர் என்பதையும் உறுதி செய்துள்ளது.

Read Entire Article