ஈரானில் போர் - கச்சா எண்ணெய் தட்டுப்பாடு

ஈரானில் ஏற்பட்டுள்ள போர் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கியது. இதன் காரணமாக ஈரானும் இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் வளைகுடா நாடுகள் மீதும் தொடர் தாக்குதல் நீடித்து வருவதால் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் கொண்டுவரப்படுகிறது. அது தற்போது முடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. போரால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. மேலும் அந்த வழியாக வரும் கப்பல் மீதும் ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் பல மாநிலங்களில் வர்த்தக சிலிண்டர் விநியோகம் முடங்கியுள்ளது. பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது. அதேநேரம் வீடுகளுக்கான சமையல் எரிவாயும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சிலிண்டர் முன்பதிவு செய்ய காலஅவகாசம்

இதனையடுத்து வீட்டு சிலிண்டர்களுக்கான சிலிண்டர்கள் பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் என்ற குறைந்தபட்ச கால இடைவெளியானது தற்போது 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டில் சிலிண்டர் காலியானால் 25 நாட்களுக்கு பிறகே மீண்டும் சிலிண்டர் விநியோகப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான கேஸ் சிலிண்டர் மட்டுமே கையிருப்பு மட்டுமே உள்ளளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் ஆலோசனை

இதனையடுத்து தங்கு தடையின்றி கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி அதன் வாயிலாக தங்கு தடையின்றி சிலிண்டர் விநியோகம் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக முதலைச்சர் ஸ்டாலின் சிலிண்டர் பற்றாக்குறை தொடர்பாக அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார்.