கோயம்பத்தூரில், நாளை பிப்ரவரி 03ஆம் தேதி, எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு சரி செய்யப்படும்.

கோவையில் நாளை மின்தடை: 03-01-2025

இந்நிலையில், கோயம்பத்தூரில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: TVK 4Th List: 4ம் கட்ட தவெக பட்டியலை வெளியிட்ட விஜய்.! மேலும் 19 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்...

மின்தடை செய்யப்படும் இடங்கள்:

துடியலூர் பகுதிகள்:

துடியலூர், வடமதுரை, அப்பநாய்கண்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே. நகர், வி.கே.வி நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, பழனிகவுண்டன்புதூர், பண்ணிமடை, தாலியூர்,வேணுகோபால் ஹாஸ்பிடல், பாப்பாநாய்கண்பாளையம், கே.என்.ஜி. புதூர் மற்றும் திப்பனுர்.

கீரணத்தம் பகுதிகள்:

கீரணத்தம், வரதையம்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு

மின் பராமரிப்பு :

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.

மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது.

Also Read:Budget Memes: வைரலாகும் பட்ஜெட் மீம்ஸ்கள்: இது மத்திய பட்ஜெட் இல்லை, பீகார் பட்ஜெட்