CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!

3 months ago 8
ARTICLE AD

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை தவெக இணையும் திருவிழா

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்று தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தது மட்டுமல்லாமல் அரசியல் களமே பல புதிய மாற்றங்களை கண்டு வருகிறது. குறிப்பாக முதல் முறையாக ஆட்சிக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றிய ஜோசப் விஜய் தலைமையிலான தவெக பல்வேறு புதிய பாணியை கையாண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தேர்தலுக்கு முன்னர் தவெகவை குறைவாக எடை போட்ட மாற்று கட்சியினர் கூட, இப்போது தவெகவில் பதவியே தராவிட்டாலும் பரவாயில்லை என ஐக்கியமாகி வருகின்றனர்.

வாரம் 5 நாட்கள் மக்கள் பணியில் தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவரும் பிஸியாக இருப்பார்கள். சனிக்கிழமை வந்து விட்டாலே போதும் பனையூர் தவெக அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். முன்னாள் எம்.பி.,க்கள்,  எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள் தொடங்கி பலரும் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அப்படியாக தவெகவில் அதிகம் இணைந்தது அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தான்.

திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.பி., மகன்

இந்த நிலையில் சனிக்கிழமையான இன்றும் தவெகவில் பலரும் இணைந்தனர். நடிகர்கள் ரவி மரியா, ஜெ.எம். பஷீர் உள்ளிட்டோரும் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் என பலரும் தவெகவுக்கு இணைந்தனர். அவர்களை பொதுச்செயலாளர் ஆனந்த் சால்வை அணிவித்து வரவேற்றார். அந்த வகையில் யாரும் எதிர்பாராத விதமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் ஐக்கியமாகியுள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களாக அவரை தவெகவுக்கு இழுக்கும் பணி மிக தீவிரமாக நடந்து வந்தது. தான் கட்சிக்குள் வந்தால் இளைஞர் அணி தலைவர் பதவி வேண்டும் என சந்தீப் ஆனந்த் நிபந்தனை வைத்ததாகவும் சொல்லப்பட்டது.

தமிழ்நாட்டின் TASMAC அமைப்பிற்கு மிகப்பெரிய மதுபான ஆலையான  அக்கார்ட் டிஸ்டில்லரீஸ் அண்ட் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட் மதுபானம் விநியோகம் செய்து வருகிறது. இதன் உரிமையாளர் எம்.பி.,ஜெகத்ரட்சகன் தான். அப்படியிருக்கும்போது போதைப் பொருள் ஒழிப்பில் மும்முரமாக இருக்கும் தவெக, மதுபானம் உற்பத்தி ஆலை நடத்துபவரும், திமுக சிட்டிங் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் மகனுக்கு எப்படி பொறுப்பு வழங்குவது சரியாக இருக்கும் என்ற கேள்வியும் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடி.. அப்ப நீங்க யாரு? - தவெகவை பந்தாடிய எழும்பூர் பரந்தாமன்!

எனினும் முள்ளை முள்ளால் எடுப்பது போல திமுகவோ அல்லது தங்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கோ அவர்களது நெருக்கமான நபர்களைக் கொண்டு பாடம் கற்பிக்கும் முயற்சியில் தவெக களமிறங்கியுள்ளது. அதன் ஒருபகுதி தான் இதுபோன்ற நபர்களை கட்சிக்குள் இழுப்பது என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சராக பதவியேற்ற பின் தவெக தலைவர் ஜோசப் விஜய்  இன்று இரண்டாவது முறையாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவர் சமீபகாலமாக தவெகவில் இணைந்தவர்களுக்கு பதவிகளை வழங்குவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Read Entire Article