நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வருகிறார். இந்நிலையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் அக்டோபர் 16ம் தேதி கோவைக்கு செல்ல உள்ளார்.

பெரியார் அறிவுலகம்

கோவை காந்திரம் பேருந்து நிலையம் அருகே கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கும் தொடங்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் புத்தகங்கள், அறிவியல் மையத்தில் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள், ஆராய்ச்சி படிப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளன.

இதையும் படிங்க: DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!

கோவை செல்லும் முதல்வர்

இந்நிலையில் அக்டோபர் 16ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கோவை விமான நிலையம் வந்தடையும் முதல்வர் ஜோசப் விஜய், அங்கிருந்து நேரடியாக விழா நடைபெறும் இடத்திற்கு சென்று பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்க உள்ளார். தந்தை பெரியாரின் கொள்கைகள், சமூகநீதி சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் முதல்வர் விஜய் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முடிவு அடைந்த திட்டங்களை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும் சுற்றியுள்ள சாலைகள் மற்றும் வீதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் 6 தொகுதியில் தவெக வெற்றி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) என மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், தவெக 6 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.