தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளுக்கு நடிகை த்ரிஷா வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். அன்றைய நாளில் விஜய் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள், ரீ-ரிலீஸ் என கொண்டாட்டங்கள் களைகட்டும். எல்லாம் 2025ம் ஆண்டு வரை மிக சுபமாக நடந்தது. ஆனால் 2024ம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக திடீரென அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சிப் பெயரையும் வெளியிட்டு விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் சினிமாவில் 2 படங்கள் மட்டுமே நடித்து விலகி முழுநேர அரசியல்வாதியாக மாறப்போகிறேன் என வெளிப்படையாகவும் கூறினார்.

அவ்வளவு தான். நடிகர் விஜய், அரசியல் தலைவர் விஜய் என கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாட்டங்கள் தொடர்ந்தது. தான் சொன்னபடியே 2026 சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து விஜய் முதலமைச்சராக பதவியேற்று விட்டார். சினிமாவில் இருந்து விலகி விட்ட நிலையில், முதல்வராக தனது முதல் பிறந்தநாளை நேற்று (ஜூன் 22) கொண்டாடினார்.

களைகட்டிய கொண்டாட்டங்கள்

விஜய் பிறந்தநாள் ஜூன் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமையே தொடங்கி விட்டது என சொல்லலாம். பல்வேறு இடங்களில் ரத்தத்தானம், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கேக் வெட்டி கொண்டாட்டம், கோயில்களில் சிறப்பு வழிபாடு என பல வகைகளில் களைகட்டியது. பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதேசமயம் சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் கூறினார். ஜூன் 21ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மோனியம் வாயு கசிவு விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் நேற்று தனது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாட விரும்பவில்லை. தலைமைச் செயலகத்தில் அவர் வெட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட கேக்கையும் வேண்டாமென்று நிராகரித்ததாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!

வாழ்த்தாத த்ரிஷா, ரஜினிகாந்த்

இந்த நிலையில் விஜய் பிறந்தநாளில் ஒட்டுமொத்த தவெகவினர் மட்டுமல்லாம் விஜயை பிடிக்காதவர்கள் கூட ஒருவரின் வாழ்த்து பதிவை ஆவலுடனும், அச்சத்துடனும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அது நடிகை த்ரிஷா. சமீபகாலமாக விஜயுடன் அவர் இணைத்து பேசப்பட்டு வருகிறார். ஆனால் இருவரும் அப்படியான ஒரு தகவலை உறுதிப்படுத்தவில்லை. எனினும் த்ரிஷாவின் பதிவுகள், விஜய் நிகழ்ச்சியில் முன்னுரிமை போன்ற செயல்கள் சர்ச்சையை கிளப்பி வந்தது.

இதனால் முதலமைச்சராக விஜய் முதல் பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் என்ன மாதிரியான பதிவை வெளியிட்டு நம்மை திணற வைக்கப் போகிறாரோ என தவெகவினர் விழிபிதுங்கினர். நாள் முழுக்க த்ரிஷாவின் சமூக வலைத்தளப் பக்கத்தை உற்று நோக்கினர். ஆனால் த்ரிஷா விஜய்க்கு எந்தவித வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் தவெகவினர் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையாக வெடித்துள்ளது. இது விஜய் மீது அவருக்கு இருக்கும் அதிருப்தியை வெளிக்காட்டுவதாக இணையவாசிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.