தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி என நடிகரும், ரேஸருமான அஜித் தெரிவித்த நிலையில், அவருடைய ரசிகர்கள் என சொல்லப்படுபவர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர்.

லண்டனில் விஜய் - அஜித்

தமிழக முதலமைச்சராக உள்ள ஜோசப் விஜய் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். அந்த பயணத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் இன்று நடைபெறும் 2026 மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் தனது அஜித் ரெட்ஆண்ட் ரேசிங் அணி சார்பாக களமிறங்கவுள்ளார். விஜயும் அஜித்தும் ஒன்றிணையும் இந்த சம்பவம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. <iframe title="Durai Vaiko on MK Stalin | ”ஸ்டாலின் கைதானது உண்மை! ஆனா அரசியல் காரணம் இல்ல” துரை வைகோ அட்டாக்" src="https://www.youtube.com/embed/mviB9UYqdnk" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

விஜயை வாழ்த்திய அஜித்

இதனிடையே நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்த அஜித்குமார், முதலமைச்சர் விஜய் பற்றி சில விஷயங்களைப் பேசினார். அதில், “சினிமாவில் எனது சக நடிகரான விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால் நான் கார் பந்தயத்தைக் காண அழைத்தேன். இந்த நிகழ்வுகள் அனைத்தும் இந்தியாவிற்கு வருவதைக் காண்பதே எனது பெரிய விருப்பம். நாங்கள் இருவரும் கடந்த 34 ஆண்டுகளாகத் திரைத்துறையில் சக நடிகர்களாகவும் நல்ல நண்பர்களாகவும் இருந்து வருகிறோம்தனது அடுக்கடுக்கான அரசுப் பணிகளுக்கு இடையேயும் அவர் தனது அழைப்பை ஏற்றதற்கு நன்றி எனவும் தெரிவித்தார். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கொந்தளிக்கும் ரசிகர்கள் கூட்டம்

இதனிடையே தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவரும் ஒரே சமயத்தில் நடிக்க வந்தவர். எப்படி சிவாஜி - எம்ஜிஆர், ரஜினி - கமல் போல, 90களின் தலைமுறையினருக்கு விஜய் - அஜித் தான் முன்னணி நடிகர்கள். இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் எப்போதும் பரம எதிரிகளாகவே சித்தரிக்கப்பட்டு வந்தனர். அஜித், விஜயின் படங்களில் ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கும்படி வசனம், காட்சிகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். இப்படி பல்லாண்டு காலமாக இருவரும் எதிரிகள் போல ரசிகர்கள் கருதி வந்தனர். தொழில்முறை போட்டி ஒரு பக்கம் என்றாலும் மறுபக்கம் இருவரும் நல்ல நண்பர்கள் என திரைத்துறையினர் பலரும் சொல்லியும் ரசிகர்கள் காதில் விழவே இல்லை.

ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித், விஜய் இருவரும் ஒன்றாக நடித்தனர். அதன்பிறகு இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியானது. இது ரசிகர்களுக்குள் அடிதடி மோதலை உருவாக்கும் வகையில் சென்றது. 2007ம் ஆண்டுக்குப் பின் அஜித், விஜய் படங்கள் ஒன்றாக வெளியாகவில்லை. 15 ஆண்டுகள் கழித்து 2023ம் ஆண்டு தான் பொங்கலுக்கு விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய ஒரு படங்களும் வெளியானது. இப்படியான நிலையில் எதிரிகள் இருவரும் ஒன்றிணைந்து விட்டனர். அவர்களுக்காக சண்டைப் போட்ட ரசிகர்களாகிய எங்களைப் பார்த்தால் எப்படி தெரிகிறது என சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் என தங்களை சொல்லிக் கொள்ளும் கூட்டம் கிளம்பியுள்ளது.

அஜித் செய்வது பச்ச துரோகம். இருவரும் தங்கள் சுய லாபத்துக்காக ரசிகர்களை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டனர் எனவும் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் அஜித், விஜய் ஒன்றிணைந்து செயல்படுவது ஆரோக்கியமான விஷயம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.