CM Vijay TN Govt: பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் துறைரீதியான ஆய்வுக்கூட்டம் வரும் ஜுலை 2ம் தேதி முதல் தொடங்க உள்ளதாம்.

பட்ஜெட்டிற்கு தயாராகும் சிஎம் விஜய்:

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக தலைமயிலான அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தொடர்ந்து புதியதாக அமைந்துள்ள தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு, ஜுலை மாத இறுதியில் விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்த தயாராகி வருகிறது. அதைதொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதமும் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் விதமாக வரும் ஜுலை 2ம் தேதி முதல் துறை ரீதியாக அதிகாரிகளுடன், முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஜுலை 22ம் தேதி வரை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் எனவும், அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் துறைசார் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

20 ஸ்லைட் விளக்க காட்சி

ஆய்வுக் கூட்டத்திற்கு தயாராவது தொடர்பாக தலைமை செயலர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு துறை செயலருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜுலை 2ம் தேதி முதல் 22ம் தேதி வரை துறைரீதியாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. காலையில் ஒரு துறை மற்றும் மாலையில் ஒரு துறை நாளொன்றிற்கு இரண்டு துறைகள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற உள்ளன. இதற்காக துறையின் அம்சங்களை உள்ளடக்கி, ஒரு சுருக்கமான விளக்கக் காட்சியை, தொடர்புடைய புகைப்படங்களுடன், 20 ஸ்லைடுகளுக்கு மிகாமல் தயார் செய்ய வேண்டும். இந்த விளக்க காட்சி களை தலைமை செயலரின் ஒப்புதலை பெற்று, ஆய்வு கூட்டம் நடப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு முன்பாக, நாட்களுக்கு முதல்வர் அலுவலகத் திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

விளக்க காட்சியில் இடம்பெற வேண்டியது என்ன?

துறை வாரியாக சமர்பிக்கப்படும் ஸ்லைட்களில் துறையின் செயல்பாடுகள் குறித்தும், ஓராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு கால திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டு இருக்க வேண்டும். வெளிப்படை தன்மை, செயல் திறன் மற்றும் மக்களுக்கான சேவை வழங்குவதை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் இந்த விளக்க காட்சிகளில் இடம்பெற வேண்டுமாம். துறை எதிர்கொள்ளும் சவால் குறித்தும், அதில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாம். நிதி சார்ந்த பரிந்துரைகள் இருந்தால், அது தொடர்பாக நிதித்துறை செயலருடன் விவாதித்து, அதன்படி பரிந்துரைகளை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மட்டுமின்றி முதலமைச்சரும் புதியவர் என்பதால் அவர்களுக்கு எளிதாக புரிந்துகொள்ள இந்த நடவடிக்கை உதவும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: CM Vijay Vs Stalin: அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு

எந்த துறையில் எப்போது ஆய்வு?

சுமார் 20 நாட்கள் துறைரீதியான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் நாளில் கூட்டுறவு, உணவு, வருவாய் துறை தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளில் ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை துறை ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

நாள்

நேரம்

துறை

ஜூலை 2

காலை 11.30–12.15

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

பிற்பகல் 2.30

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

ஜூலை 3

காலை 11.30–12.15

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

பிற்பகல் 2.30

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை

ஜூலை 6

காலை 11.30–12.15

உயர்கல்வித் துறை

பிற்பகல் 2.30

பள்ளிக் கல்வித் துறை

ஜூலை 7

காலை 11.30–12.15

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

பிற்பகல் 2.30

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

ஜூலை 8

காலை 11.30–12.15

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

பிற்பகல் 2.30

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

ஜூலை 9

காலை 11.30–12.15

தொழில், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத்துறை

பிற்பகல் 2.30

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்

ஜூலை 13

காலை 11.30–12.15

வணிகவரி மற்றும் பதிவுத்துறை

பிற்பகல் 2.30-3.00

பொதுப்பணித் துறை

பிற்பகல் 3.00-3.30

நீர்வளத் துறை

ஜூலை 14

காலை 11.30–12.15

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை

பிற்பகல் 2.30

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

ஜூலை 15

காலை 11.30–12.15

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை

பிற்பகல் 2.30

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

ஜூலை 16

காலை 11.30–12.15

வேளாண்மை – உழவர் நலத்துறை

பிற்பகல் 2.30

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை

ஜூலை 17

காலை 11.30–12.15

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை

பிற்பகல் 2.30

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

ஜூலை 20

காலை 11.30–12.15

சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை

பிற்பகல் 2.30

இந்து சமய அறநிலையத்துறை

ஜூலை 21

காலை 11.30–12.15

மனிதவள மேலாண்மைத்துறை

பிற்பகல் 2.30

இயற்கை வளத்துறை

ஜூலை 22

காலை 11.30–12.15

திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை

பிற்பகல் 2.30

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை