"CM Seat தான் Target” - விஜய்க்கு வேறு பதவி வேண்டாம் - கோவையில் செங்கோட்டையன் பளீர் பேட்டி...

4 weeks ago 4
ARTICLE AD

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராக வந்து மக்களின் நலனை காப்பதற்கான நோக்கத்தின் அடிப்படையிலேயே தனது சினிமா துறையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

234 தொகுதிகளிலும் போட்டி

கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன், டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் த.வெ.க தலைவர் விஜய் உரிய பதிலை அளித்து உள்ளார். முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டுவிட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு விஜய் வந்திருப்பதாக தெரிவித்தார். தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருவது, தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதை காட்டுவதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை கேள்வி குறியாக மாறியுள்ளதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.  தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற மன நிலையில் மக்கள் உள்ளதாகவும்,மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார். இதேபோன்று  234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் த.வெ.க கட்சியில் உள்ளனர்.

த.வெ.க மற்றும் என்.டி.ஏ கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன் விஜய் முதலமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார் என தெரிவித்தார்.

Read Entire Article