தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் என்னவெல்லாம் செய்தது என சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பட்டியலிட்டு பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விஜய் இன்று பதிலுரை அளித்தார். அப்போது தவெக ஆட்சிக்கு வந்து என்ன செய்தீர்கள் என எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு உதாரணமாக சில திட்டங்கள், அறிவிப்புகளை விஜய் பட்டியலிட்டார்.

40 நாட்கள் ஆட்சியில் தவெக செய்தது என்ன?

1. பெண்கள் பாதுகாப்புக்கென சிங்கப்பெண்கள் சிறப்பு படை
2. 200 யூனிட் இலவச மின்சாரம்
3. போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அமைப்பு
4. குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.134.83 கோடி சிறப்பு தொகுப்பு திட்டம்.
5. 717 டாஸ்மாக் கடைகள் மூடல் - அங்கு பணியாற்றியவர்களுக்கு வேறு கடைகளில் வேலை
6. அம்மா உணவகங்கள் புதுப்பிக்கும் பணி
7. பத்திரப்பதிவு துறையில் பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி - வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை திட்டம்
8. அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில், ஸ்கேன் மையங்களில் கருவுறுவதற்கு முன், பின் நடைபெறும் தவறுகளை கண்டறியவும், விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணித்தல்
9. கூட்டுறவு வங்கிகளில் ஏழை எளிய மக்கள் வாங்கிய கடனுக்காக முதற்கட்டமாக ரூ.2045 கோடி தள்ளுபடி
10. மத்திய அரசால் கடந்த 2 ஆண்டால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல்ஜீவன் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
11. காஞ்சிபுரம் மாவட்டம் மைய விரிவாக்க திட்டம்
12. கோவையில் மின்னணு பொருட்கள், அமைப்புகள் உற்பத்தி திட்டம்
13. திருவள்ளூரில் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
14. சட்ட விரோத கல்குவாரி, அனுமதியின்றி கனிம வளம் எடுத்து செல்வது தடுத்தல்
15. அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மின்னணு முறையில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை
16. அனைத்து துறைகளிலும் லஞ்ச, லாவண்யம் இல்லாத நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
17. கனிமங்களை கண்காணிப்பது, எல்லைகள் நிர்ணயிப்பது, ஆளில்லா விமானம் மூலம் அளவிடுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற பல விஷயங்கள் இந்த 40 நாட்களில் செய்துள்ளோம்.

தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவோம்

இனிவரும் நாட்களில் படிப்படியாக உழைத்து லஞ்சம் இல்லாத, வெளிப்படையான, பெண்கள் பாதுகாப்பு நிறைந்த தமிழ்நாட்டை மக்களுக்கு தருவது தான் தவெக அரசின் ஒரே இலக்கு. அதை நிறைவேற்றி காட்டுவோம். எட்டு கோடி மக்கள் நம்முடன் இருக்கும்போது ஏன் இதை செய்ய முடியாது?

தமிழ்நாட்டின் கருவூலம் தேய்ந்து போனதைப் பற்றி எதிர்க்கட்சி தெரிவித்தது. தமிழ்நாட்டின் கஜானா திசை மாறியுள்ளது. அதைப் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி கேள்வி எழுப்புகிறார். கடந்த திமுக ஆட்சியில் கடைசி 8 மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படாமல் இருந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி மக்கள் நலன் சார்ந்த கருத்துகளை தெரிவிக்கலாம்.