CLAT 2025: டிச.1 கிளாட் சட்ட நுழைவுத் தேர்வு; அக்.15 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?

1 year ago 6
ARTICLE AD

மத்திய அரசின் கீழ் இந்தியா முழுவதும் 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Consortium of National Law Universities) சார்பில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர ‘கிளாட்’ (Common Law Admission Test- CLAT) எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் ஒரு ஆண்டு எல்எல்எம் படிப்புகளுக்காக (5-year integrated Ll.B. மற்றும் One year Ll.M. programmes) இந்த நுழைவுத் தேர்வு நடக்கிறது.

டிசம்பர் 1 கிளாட் தேர்வு

அதேபோல தேசிய சட்டப் பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இந்த நிலையில், 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இதற்காக கிளாட் தேர்வு, டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

கிளாட் நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்களுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. மாணவர்கள், அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காகத் தேர்வர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிப்பது அவசியம்.

தேர்வு எப்படி?

மொத்தம் 120 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் மதியம் 2 முதல் 4 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 4.40 வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு ஆஃப்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், பொது அறிவு, லாஜிக்கல் ரீசனிங், லீகல் ரீசனிங் உள்ளிட்ட கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும்.

கட்டணம் எவ்வளவு?

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.4 ஆயிரம் கட்ட வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.3,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பெற ரூ.500 கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் முன்பதிவு செய்து, லாகின் செய்யும்போது மாதிரி வினாத் தாள்களைப் பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

https://consortiumofnlus.ac.in/clat-2025/participating_universities.html என்ற இணைப்பில் கிளாட் தேர்வின் அடிப்படையில் சேர்க்கையை நடத்தும் பல்கலைக்கழகங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

https://consortiumofnlus.ac.in/clat-2025/ug-eligibility.html என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிப்பதற்கான தகுதியை அறிந்துகொள்ளலாம்.

https://consortiumofnlus.ac.in/clat-2025/ug-question-format.html என்ற இணைப்பில் பாடத்திட்டம், வினாத்தாள் முறை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

கூடுதல் தகவல்களுக்கு https://consortiumofnlus.ac.in/ என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

இ - மெயில் முகவரி : [email protected]
தொலைபேசி எண்: 08047162020

Read Entire Article