Citroen C5 Aircross: சிட்ரோயன் நிறுவனத்தின் C5 Aircross கார் மாடலின் விலை ரூ.37.4 லட்சமாகும்.

சிட்ரோயன் அதிரடி அறிவிப்பு:

கோயம்புத்தூரில் உள்ள சிட்ரோயன் ப்ராண்டின் டீலரான SGA சிட்ரோயன், வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதமான அதிரடியான சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ப்ராண்டின் C5 ஏர்க்ராஸ் கார் மாடலை வாங்குவோர், எந்த வித கூடுதல் கட்டணமும் இன்றி C3 X கார் மாடலை இலவசமாக பெறக்கூடும். குறுகிய காலத்திற்கான இந்த சலுகையானது கையிருப்பு உள்ள வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி சிட்ரோயன் நிறுவனத்தின் முதன்மையான கார் மாடலாக விற்பனை செய்யப்படும், C5 ஏர்க்ராஸ் விலை ரூ.37.4 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

C5 ஏர்க்ராஸ் - இன்ஜின் விவரங்கள்:

ஃப்ளாக்‌ஷீப் கார் மாடலில் இடம்பெற்றுள்ள 2.0லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆனது 177hp மற்றும் 400Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. டார்க் கன்வெர்டர் செட்-அப்பை கொண்டுள்ள, ஒரே ஒரு 8 ஸ்பீட் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக லிட்டருக்கு 17.5 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ப்ரீமியம் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் C5 ஏர்க்ராஸ் காரானது, ஹுண்டாய் டக்சன், ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வாகன் டிகுவான், டொயோட்டா ஃபார்ட்சுனர் மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

C5 ஏர்க்ராஸ் - வெளிப்புற டிசைன்

கடந்த 2022ம் ஆண்டின் இறுதியில் ஃபேஸ்லிஃப்ட் மூலம் C5 ஏர்க்ராஸ் அப்க்ரேட் பெற்றது. செதுக்கப்பட்ட மூக்கு பகுதி, இரட்டை எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள், ஏர் இண்டேக்கிற்கான நம்பகமான விவரம், 18 இன்ச் வீல்கள், ப்ரொடெக்டிவ் ஸ்டைலிலான லோயர் ட்ரிம் மற்றும் ரெக்டேங்குலர் எல்இடி டெயில் லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன. பேர்ல் ஒய்ட், பெர்லா நேரா ப்ளாக், குமுலஸ் க்ரே மற்றும் எக்ளிப்ஸ் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் இந்த கார் கிடைக்கிறது.

C5 ஏர்க்ராஸ் - உட்புற அம்சங்கள்

உட்புறத்தி இந்த எஸ்யுவி ஆனது 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் இண்டெர்ஃபேஸ் சப்போர்டிங் ஸ்மார்ட்போன் மிர்ரரிங் மற்றும் 12.3 இன்ச் ட்ரைவர் டிஸ்பிளே ஆகியவற்றை கொண்டுள்ளது. இதுபோக டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் க்ளாஸ் ரூஃப், ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்குகள் என பல தரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

C3 X க்ராஸோவர் கார் எப்படி?

இந்நிலையில், தான் குறுகியாக சலுகையாக ப்ராண்டின் ஃப்ளாக்‌ஷீப் கார மாடலை வாங்கினால்,C3 X க்ராஸோவர் கார் மாடல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட வலுவான அப்க்ரேட்களை பெற்றாலும் எளிய அணுகலுக்கான விலையை தக்கவைத்து கொண்டது. அதன்படி, புஷ்-பட்டன் இக்னீஷியன், ச்பீட் லிமிட்டிங் க்ரூஸ் கன்ட்ரோல், மல்டி-வியூ 360 டிகிரி கேமரா மற்றும் எல்இடி லைட்டிங் பேக்கேஜ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. கேபினானது லெதரேட் ஃபினிஷ்ட் டேஷ்போர்ட், வயர்லெஸ் போன் கனெக்டிவிட்டி உடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீனை பெற்றுள்ளது.

பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி எய்ட், ஹில்-ஹோல்ட் ஃபங்க்சன்கள், டயர் ப்ரஷர் மானிட்டரிங் மற்றும் பெரிமீட்டர் அலாரம் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்டைலிங் அடிப்படையில் ப்ராண்டின் மிகவும் பழக்கமான பிளவுபட்ட விளக்கு டிசைன் மற்றும் 180 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டுள்ளது. இன்ஜின் அடிப்படையில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் டர்போ எடிஷனானது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 10 நொடிகளில் எட்டும் திறன் பெற்றுள்ளது. இதன் விலை ரூ.4.95 லட்சத்தில் தொடங்கி ரூ.10.19 லட்சம் வரை நீள்கிறது.

அதிரடியான சலுகைக்கான காரணம் என்ன?

கடந்த 6 மாதங்களில் சிட்ரோயனின் C5 ஏர்க்ராஸ் கார் மாடலின் 5 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. எனவே, விற்பனையை ஊக்குவிக்கும் விதமாகவும், கையிருப்பில் உள்ள யூனிட்களை வெளியேற்றும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே கவனத்தை பெறாமல் போக இந்த காரின் விலையும், ப்ராண்டிற்கு உள்நாட்டில் உள்ள மதிப்புமே ஆகும். இந்த காரின் ஆன் ரோட் விலையானது 45 லட்சத்தை கடந்து போகிறது. அதே விலைக்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான டொயோட்டா ஃபார்ட்சுனர், ஜீப் மெரிடியன், எம்ஜி க்ளோஸ்டர் போன்ற கார்களை தேர்வு செய்ய முடிகிறது.

இந்த போட்டியாளர்கள் C5 ஏர்க்ராஸை காட்டிலும் அதிக அம்சங்கள் மற்றும் வலுவான செயல்திறன் கொண்ட இன்ஜினை பெற்றுள்ளது. சிட்ரோயனின் 5 சீட்டரானது போட்டியாளர்களுக்கு ஈடாக நடைமுறைதன்மைக்கு உகந்ததாக இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. இதன் விளைவாகவே C5 ஏர்க்ராஸால் விற்பனையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ப்ராண்டிற்கு மிக குறைவான சேவை நிலையங்களே இருப்பதோடு, விற்பனைக்கு பிறகான சேவையும் மோசமாக உள்ளது. இதன் காரணமாகவும் வாடிக்கையாளர்கள் இந்த சிட்ரோயனின் காரை தேர்வு செய்ய தயங்குகின்றனர்.