சித்தார்த் அதிதி திருமணம்

நீண்ட நாள் ரகசிய காதலர்களான சித்தார்த் மற்றும அதிதி சமீபத்தில் தான் தங்களது காதலை வெளிப்படையாக அறிவித்தார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள் . பார்த்த மாத்திரத்திலேயே இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காதல் வயப்பட்டார்கள். இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டபோது அதுபற்றி அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் தங்கள் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இவர்களது திருமணம் நிச்சிக்கப்பட்டது. இன்று தெலங்கானாவில் வனர்பதி மாவட்டத்தில் உள்ள அதிதி குடும்பத்தினரின் பூர்வீக கோயிலான ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. சித்தார்த் அதிதி திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

வேட்டையன் ஆடியோ லாஞ்ச்

த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் , துஷாரா விஜயன் , ரக்‌ஷன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள் . அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

லால் சலாம் ஓடிடி ரிலீஸ்

ஐஸ்வர்யா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் , அனந்திகா சனில்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். லால் சலாம் படம் திரையரங்கத்தில் வெளியாக இருந்த சில நாட்கள் முன்பாக படத்தின் முக்கியமான காட்சிகள் இருந்த ஹார்ட் டிஸ்க் தொலைந்துபோனதாக படகுழு தெரிவித்தது. தற்போது தொலைந்து போன காட்சிகளை மீட்டுள்ளதாகவும் படத்தின் புதிய வெர்ஷன் ஒன்று விரைல் ஓடிடி தளத்தில் வெளியாகும் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இணையும் செல்வராகவன் ஜி.வி பிரகாஷ் கூட்டணி

செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன , ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார் ஜி.வி பிரகாஷ் குமார். தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி புதிய படத்திற்காக இணைந்துள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பதாக செல்வராகவன் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். ஒருவேளை இருவரும் தற்போது இந்த படத்திற்காக இணைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சைமா விருது வென்ற தமிழ் நட்சத்திரங்கள்

தென் இந்திய திரைக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு சைமா. அந்த வகையில் 2024 ஆண்டு சைமா விருது வழங்கு விழா நேற்று செப் 15 ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு இந்த நிகழ்வில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது. தமிழ் , தெலுங்கு , கன்னட மொழி திரைப்பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். தமிழ் திரைத்துறை சார்பாக எந்தெந்த நடிகர்கள் விருது வென்றார்கள் என்பதை தெரிந்துகொள்ள

மேலும் படிக்கவும் : SIIMA Winner List : ஐந்து விருதுகளை தட்டித்தூக்கிய ஜெயிலர்...சைமா விருது வென்றோர் முழுப் பட்டியல் இதோ