விடாமுயற்சி

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. அர்ஜூன் ,த்ரிஷா , ஆரவ் , ரெஜினா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அஜித் மற்றும் த்ரிஷாவின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது

Adding a touch of fondness! ✨ Presenting the third look of #VidaaMuyarchi 🌟 Witness the Vintage pair #AjithKumar & @trishtrashers 🫰🏻💗✨#EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial… pic.twitter.com/swUOkMdsCr

— Lyca Productions (@LycaProductions) July 19, 2024

தங்கலான் ரிலீஸ் தேதி

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து , பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வாழை படத்தின் பாடல் வெளியீட்டி மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் முதல் பாடல் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜின் மனைவி திவ்யா செல்வராஜ் நவ்வி ஸ்டுடியோஸ் சார்பாக இப்படத்தை தயாரித்துள்ளார். ஹாட்ஸ்டார் இப்படத்தை வெளியிடுகிறது. முழுமுழுக்க குழந்தைகளை மையப் படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வாழை படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.

புஷ்பா 2 சர்ச்சை

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகிவரும் படம் புஷ்பா 2 .இப்படத்தின் படப்பிடிப்பு முடிய இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் படத்தின் இயக்குநர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜூன் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இடைவெளி எடுத்துள்ளதும் இந்த தகவலை உறுதிப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநருடன் ஏற்பட்ட வாக்கு வாதம் காரணத்தினால் அல்லு அர்ஜூன் புஷ்பா கெட் அப்காக வைத்திருந்த தனது தாடியை நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது தாடியை குறைத்த லுக்கில் அல்லு அர்ஜூன் விமானத்தில் இருக்கும் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்துள்ளார்கள். ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது.