சென்னை திரும்பிய ரஜினி:

இந்தியாவின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் பங்கேற்று சென்னை திரும்பியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அம்பானி வீட்டு கடைசி கல்யாணம். ரொம்ப பிரம்மாண்டமாக செய்திருந்தார்கள். அதில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருந்தது என தெரிவித்து இருந்தார். மேலும் நண்பர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை இன்னும் பார்க்கவில்லை. நாளை பார்க்கப்போகிறேன் என தெரிவித்து இருந்தார்.

இந்தியன் 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் :

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியானது. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படம் வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் 109.15 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் உலகளவில் 105 கோடி வசூல் செய்து இருந்த நிலையில் மூன்றே நாட்களில் மகாராஜா படத்தின் வசூலை முறியடித்து இந்த ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படமாக மாறியுள்ளது இந்தியன் 2 என கூறப்படுகிறது.

பார்த்திபனின் 'டீன்ஸ்' :

இரவில் நிழல் படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'டீன்ஸ்'. இந்தியன் 2 வெளியான அதே நாளில் களத்தில் துணிச்சலுடன் இறங்கிய டீன்ஸ் திரைப்படத்தை முதல் பெரிய அளவில் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் மூன்றாம் நாள் திரையரங்கில் கூட்டம் அலைமோதியதை பார்த்து மனது குளித்து போன பார்த்திபன் தனஞ்சுடைய சோசியல் மீடியா மூலம் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

ஆயிரத்தில் ஒருவன் 2 :

கார்த்தி , ஆண்டிரியா , ரீமா சென் , பார்த்திபன் உள்ளிட்டோரின் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. அட்வென்ச்சர் ஃபேண்டஸி படமாக உருவான இப்படம் பெரியளவில் கவனிக்கப்படவில்லை. ஆனால் அடுத்தடுத்த தலைமுறை ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இயக்குநர் செல்வராகவன் சில ஆண்டுகள் முன்பாக போஸ்டர் வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த படத்தை தயாரிக்க பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் முன்வரவில்லை.

இந்நிலையில் ”கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள்.. இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ..” என பரபரப்பு பதிவை போஸ்ட் செய்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி.

கங்குவா அப்டேட் :

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூர்யா பிறந்தநாளையொட்டி கங்குவா படத்தின் முதல் பாடலை ஜூலை 23-ஆம் தேதி வெளியிடுவதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார். இது சூர்யா மற்றும் திஷா பதானி காதல் பாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `